- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை - அவங்களே இப்படி சொல்லிட்டாங்களா? அப்செட்...

நடிகர் அஜீத்குமார் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை – அவங்களே இப்படி சொல்லிட்டாங்களா? அப்செட் ஆன ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை தொடர்ந்து 1.5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்ற படத்தில் அஜீத்குமார் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஷாலினி சொந்தமாக தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கியமான நண்பர் கேரக்டரில் முதலில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் கருதி அவருக்கு அதிக சம்பளம் தர முடியாத நிலையில் அந்த படத்தில் இருந்து நடிகர் மோகன்லால் விலகி விட்டார்.

- Advertisement -

அதனால் அந்த கேரக்டரில் வேறு யாரேனும் ஒரு தமிழ் நடிகர் நடிக்க வாய்ப்புள்ளது. முதல்வர் விஜயை தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகர் சத்யராஜ் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று ஏற்கனவே அஜீத்குமார் கூறிவிட்டார். அதனால் அந்த வாய்ப்பு நடிகர் பிரகாஷ் ராஜூக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

இதற்கிடையே டேர் டெவில் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க தெலுங்கில் நட்சத்திர நடிகையாக உள்ள ஸ்ரீலீலாவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஏற்னேவே ஏகே 64 படம் இயக்க டைரக்டராக ஆதிக் ரவிச்சந்திரன் கமிட் ஆன போதே நடிகை ஸ்ரீலீலாவிடம் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

- Advertisement -

கடந்த ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் நடிகை ஸ்ரீலீலாவிடம் டேர் டெவில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே கமிட் ஆன படங்களுக்கு கால்ஷீட் தந்துள்ளதால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் தருவதில் நெருக்கடி இருப்பதாக ஸ்ரீலீலா நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார். எனினும் வாய்ப்பிருந்தால் கால்ஷீட் தருவதாகவும் ஒரு நம்பிக்கை தந்திருக்கிறார்.

ஒரு காலத்தில் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்றவர்களின் படங்களில் நடிக்க முன்னணி நடிகைகள் வளரும் நடிகைகள் தவம் இருப்பார்கள். அதே போல் மணிரத்னம் பாரதிராஜா போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதே தங்கள் லட்சியம் என்பார்கள். ஆனால் இப்போது தேடி வந்த வாய்ப்பை கூட நிராகரிக்கும் அளவுக்கு முன்னணி நட்சத்திரங்களின் இமேஜ் சரிந்திருப்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

சற்று முன்