- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகை சுகன்யா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் அவர்...

மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகை சுகன்யா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் அவர் நடிப்பது யாருடன் தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. புது நெல்லு புது நாத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுகன்யா தொடர்ந்து பல படங்களில் தமிழ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

குறிப்பாக மகாநதி இந்தியன் சின்ன மாப்பிள்ளை சின்ன கவுண்டர் வண்டிச்சோலை சின்ராசு உடன்பிறப்பு வால்டர் வெற்றிவேல் திருமதி பழனிசாமி மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் நடிகை சுகன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். குறிப்பாக இந்தியன் படத்தில் வயதான மூதாட்டி கேரக்டரில் சுகன்யா நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை சுகன்யா, திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார். எனினும் நல்ல கேரக்டர்கள் என்றால் மட்டும் அந்த படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இயக்குனர் சேரன் டைரக்‌ஷனில் திருமணம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் சுகன்யா நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் சுகன்யா நடித்திருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டில் தமிழில் தீ இவன் என்ற படத்தில் சுகன்யா நடித்திருந்தார். அதேபோல் கடந்த 2014ம் ஆண்டில் மலையாளத்தில் ஆமையும் முயலும் என்ற படத்தில் வில்லி கேரக்டரில் நடிகை சுகன்யா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் மீண்டும் நடிகை சுகன்யா நடித்து வருகிறார். இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் உருவாகி உள்ள வரவு என்ற மலையாள படத்தில் நடிகை சுகன்யா நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் டெய்சி என்ற கன்னியாஸ்திரி கேரக்டரில் நடிகை சுகன்யா நடித்து இருக்கிறார். இதற்கு முன்பு தமிழில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான எல்லாம் அவன் செயல் என்ற படத்திலும் நடிகை சுகன்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இளமையான நடிகையாக உள்ள நடிகை சுகன்யா தமிழில் மலையாளத்தில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்