- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்துல கதாநாயகி கேரக்டரா? எனக்கு வேண்டவே வேண்டாம் என தெறித்து ஓடும் பிரபல நடிகை -...

படத்துல கதாநாயகி கேரக்டரா? எனக்கு வேண்டவே வேண்டாம் என தெறித்து ஓடும் பிரபல நடிகை – என்ன கொடும சார் இது?

- Advertisement -

கடந்தாண்டில் வெளியான படங்களில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படமாக லப்பர் பந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படம் பெரிய அளவில் பாராட்டை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. யதார்த்த கதைக்களத்தில் உருவான காக்கா முட்டை பார்க்கிங் குட்நைட் பட வரிசையில் இந்த படமும் இணைந்தது.

படத்தில் நாயகனாக ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தார். முக்கிய கேரக்டரில் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு அவர் கெத்து தினேஷ் என அழைக்கப்படுகிறார். படத்தில் அவரது பெயர் பூமாலை என இருந்தாலும் கிரிக்கெட்டில் அவர் கெத்து என அழைக்கப்பட்டதால் அட்டக்கத்தி தினேஷ், லப்பர் பந்து படம் மூலம் கெத்து தினேஷாக மாறிவிட்டார்.

- Advertisement -

இந்த படத்தில் கெத்து தினேஷ் மனைவியாக, படத்தின் நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் அம்மாவாக நடித்திருந்தவர் சுவாசிகா. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு சுவாசிகாவின் கேரக்டரும் அவரது அட்டகாசமான அழுத்தமான நடிப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கம்பீரமான அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

லப்பர் பந்து படத்துக்கு பிறகு சுவாசிகா, நடிகர் சூர்யாவுக்கு அம்மாவாக ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். அடுத்து சூரி நடிப்பில் வருகிற 16ம் தேதி வௌியாக உள்ள மாமன் படத்தில் சூரியின் அக்காவாக நடித்திருக்கிறார். அதே போல் சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாக உள்ள வேட்டை கருப்பு படத்திலும் முக்கிய கேரக்டரில் சுவாசிகா நடித்திருக்கிறார்.

- Advertisement -

இளமையான தோற்றமும் வசீகரமான அழகும் உள்ள சுவாசிகாவை இயக்குனர் பலர், தங்களது படங்களில் கதாநாயகியாக நடிக்க அழைக்கின்றனர். ஆனால் கதாநாயகி கேரக்டரா, வேண்டவே வேண்டாம் என சுவாசிகா மறுத்து விடுகிறார். இளம் வயது அம்மா கேரக்டர், அக்கா, அத்தை, சித்தி போன்ற குணச்சித்திர கேரக்டர்களில் நடிக்க சம்மதிக்கிறேன். ஹீரோயின் கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடுகிறார்.

வழக்கமாக இளம் வயது நடிகைகள், கதாநாயகியாக நடித்துதான் கல்லா கட்ட விரும்புவர். ஆனால் சுவாசிகா ஏற்கனவே சில படங்களில் நாயகியாக நடித்து போதிய வரவேற்பு இல்லாமல் ஏமாற்றம் அடைந்தவர். அதனால் புத்திசாலித்தனமாக ஹீரோயின் வேண்டாம். ஓரிரு படஙகளில் காணாமல் போய்விடுவோம். அம்மா அக்கா அத்தை போன்ற கேரக்டர் என்றால் நீண்ட காலத்துக்கு தாக்கு பிடிக்கலாம் என்பதை புரிந்துக்கொண்டு ஹீரோயின் கேரக்டரை தவிர்த்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்