நடிகை தபு இந்திய அளவில் ரசிகர்களால் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் மராட்டி வங்காளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஆரம்பத்தில் மாடலாக இருந்து பிறகு சினிமாவுக்குள் வந்தவர். இவரது பூர்வீகம் ஆந்திரா என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 1971ம் ஆண்டில் பிறந்த நடிகை தபுவுக்கு இப்போது 53 வயதாகிறது. இன்னும் அவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். மேலும் கடந்த 1991ம் ஆண்டு முதல் அவர் சினிமாவில் நடித்து வருகிறார். மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் மிக அதிக எண்ணிக்கையில் நடித்திருக்கிறார்.
தமிழில் நடிகை தபு பத்துக்கும் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். குறிப்பாக காதல் தேசம் சினேகிதியே இருவர் தாயின் மணிக்கொடி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடிகை தபுவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் அஜீத்குமார் தபு ஜோடி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் சூப்பராக இருந்தது.
இந்நிலையில் நடிகை தபு மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
சினேகிதியே படம் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தமிழ் படத்தில் நடிகை தபு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படம் இது.
தமிழில் ஏஸ் ஆகாசவீரன் டிரெயின் ஆகிய படங்களை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையே பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்திலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை தபு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தபு நடிக்கிறாரா என்பது பற்றிய தகவல் இல்லை.





