- Advertisement -
Homeபொழுதுபோக்குவீட்டுல ஜாலியாக இருக்க சொல்வேன், நான் அவர்களிடம் கோபப்படவே மாட்டேன். ரொம்ப கூலாக நடந்துக்கொள்வேன் -...

வீட்டுல ஜாலியாக இருக்க சொல்வேன், நான் அவர்களிடம் கோபப்படவே மாட்டேன். ரொம்ப கூலாக நடந்துக்கொள்வேன் – ஓபனாக சொன்ன நடிகை தமன்னா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை தமன்னா. கல்லூரி வியாபாரி அயன் சுறா பையா தோழா வேங்கை உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார்.

அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அவர் இப்போது இந்தி படங்களில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக தற்போது வலம் வரும் தமன்னா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தனது கவர்ச்சி நடனங்களாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறார்.

- Advertisement -

தற்போது தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் என்ற படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் ஐந்து புதிய படங்களில் கமிட்டாகி தமன்னா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை தாண்டி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா சொந்தமாக நகைக்கடை உள்ளிட்ட பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னாவிடம் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள் என்று ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நடிகை தமன்னா வெளிப்படையாக பதிலளித்து இருக்கிறார்.

- Advertisement -

அதுகுறித்து நடிகை தமன்னா கூறியதாவது, நான் ஒரு குழந்தைக்கு தாயானால் மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பேன் என்று என் அம்மா நினைக்கிறார். ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் மிகவும் கூலான அம்மாவாக தான் இருப்பேன். என் குழந்தைகளுடன் மிகவும் சகஜமாகவும் ஜாலியாகவும் பழக விரும்புகிறேன். அவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தாயாக இருக்க மாட்டேன்.

இன்று பள்ளிக்கு போக வேண்டாம். சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லும் அம்மாவாக நான் இருக்க விரும்புகிறேன். என் குழந்தைகளுடன் ஒரு தாயாக மட்டுமில்லாமல் அவர்களின் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று நடிகை தமன்னா கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்