தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் நடிகை தமன்னா. நடிகர் ரவி கிருஷ்ணாவுடன் கேடி என்ற படத்தில் நடித்து தமிழில் ரசிகர்களுக்கு தமன்னா அறிமுகமானார். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான கல்லூரி படத்தில் நடித்த பிறகு நடிகை தமன்னாவுக்கு நல்ல அடையாளமும் வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.
தொடர்ந்து தமிழில் பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு தமன்னா ஜோடியாக நடித்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் புதிய இளம் கதாநாயகிகளின் வருகை அதிகரித்ததால் தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. அதனால் நடிகை தமன்னா தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்டினார். அங்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற நடிகை தமன்னா, ஜி கர்தா, லாஸ்ட் ஸ்டோரி 2 படங்களில் நடித்தார். அந்த படங்களில் தமன்னா லிப்லாக் முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டினார். அவருடன் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் படுக்கையறை மற்றும் உதட்டு முத்த காட்சிகளில் நடிகை தமன்னா இந்தி சினிமா ரசிகர்களை கிறங்கடித்தார்.
இதற்கிடையே நடிகர் விஜய் வர்மா, நடிகை தமன்னா இடையே நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர். இரவு நேரங்களில் அவர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலானது. விரைவில் அவர்கள் திருமண அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நடிகை தமன்னா, அவரது காதலர் விஜய் வர்மா திடீரென பிரிந்து விட்டனர். இதுவரை தமன்னாவின் காதலராக நெருக்கம் காட்டிய நடிகர் விஜய் வர்மா, இப்போது பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக் என்பவரை காதலிக்கிறார். இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிவதாக பாலிவுட் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காதலனை பிரிந்த நடிகை தமன்னா தொடர்ந்து நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னாவிடம், உங்களின் பழைய காதலர் விஜய் வர்மா வேறு ஒரு நடிகையுடன் சுற்றிக்கொண்டு இருக்கிறாரே என்று அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கோபமாக பதிலளித்த நடிகை தமன்னா, யார் எப்படி போனால் எனக்கென்ன? என்று சூடாக பதில் தந்திருக்கிறார். இருவரும் கடும் சண்டைக்கு பிறகுதான் இனி உறவே வேண்டாம் என்று பிரிந்திருப்பார்கள் போல என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





