- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் அப்படி ஒரு வாய்பபு ரசிகர்களுக்கு கிடைக்குமா? ஜெயிலர் 2 படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறாரா?...

மீண்டும் அப்படி ஒரு வாய்பபு ரசிகர்களுக்கு கிடைக்குமா? ஜெயிலர் 2 படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறாரா? – அவரே சொன்ன பதில்!

- Advertisement -

தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை தமன்னா. வியாபாரி கல்லூரி பையா வேங்கை படிக்காதவன் சுறா விஸ்வாசம் அயன் என பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் பிறகு பாலிவுட் பக்கம் சென்றார்.

அங்கு சில வெப் சீரிஸ்களில் நடித்த தமன்னா தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்தார். குறிப்பாக விஜய் வர்மா என்ற நடிகருடன் அவர் நடித்த போது உதட்டு முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் எல்லை மீறிய ஆபாசமாக நடித்தார். ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் வர்மா மீது தமன்னா காதல் வயப்பட்டார்.

- Advertisement -

அவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாக புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலானது. இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்று பேசப்பட்ட நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். இப்போது விஜய் வர்மா வேறு ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

இதற்கிடையே ஜெயிலர் படத்தில் காவாலையா பாடல் காட்சியில் குத்தாட்டம் போட்டு அசத்திய தமன்னா ஜெயிலர் 2 படத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை தமன்னா கூறியதாவது, எப்போதுமே முன்கூட்டியே திட்டமிடும் பழக்கம் எனக்கு கிடையாது. எனது கால் போன போக்கில் ஓடிக்கொண்டே இருப்பேன். இப்படித்தான் என்னுடைய டேட்டிங் வாழ்க்கையிலும் செயல்பட்டேன்.

- Advertisement -

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது தாமாக நடக்கும்போது அதை நான் ஏற்றுக் கொள்வேன். அதை நான் ஒருபோதும் திரும்பத் திரும்ப தேடிச் செல்வதில்லை. ரஜினியின் ஜெயிலர் படத்தில் நான் நடனமாடிய காவாலைலா என்ற பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. அதனால் அந்த படத்தின் 2ம் பாகத்திலும் இடம்பெற நான் ஆர்வமாக உள்ளேன்.

ஆனாலும் ஜெயிலர் 2 படக்குழுவில் இருந்து இதுவரை எனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை. தெலுங்கில் ஓட்டேலா 2 படத்திற்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தில் நான் கமிட்டாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று நடிகை தமன்னா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். காவாலையா பாடல் போன்று மீண்டும் ஒரு முறை ஜெயிலர் 2 படத்தில் தமன்னாவை ரசிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்