கடந்த சில தினங்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் தீப்பற்றி எரியும் விஷயமாக நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவு குறித்த அறிக்கை பலத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனது மனைவி ஆர்த்தியை பிரியும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன் என்றும், இது என் சொந்த முடிவு என்று ஜெயம் ரவி அறிக்கை விட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தார்.
இதையடுத்து, அப்படி ஒரு அறிக்கை விட்டது அவரது தனிப்பட்ட முடிவு. இதில் எனக்கு உடன்பாடும் விருப்பமும் இல்லை. என் கணவரை பார்க்க நானும், என் பிள்ளைகளும் பலமுறை முயற்சித்தும் அது நடக்கவில்லை. இப்படி ஒரு முடிவுக்கு அவர் ஏன் சென்றார் எனக்கு தெரியவில்லை. இந்த விஷயங்களை பொதுவெளியில் பேசுவதை கூட நான் விரும்பவில்லை என்று நேற்று ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு ஏற்கனவே உறுதியாகி விட்டது. அடுத்த மாதம் அவர்களது வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் – சைந்தவி பிரிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டது மட்டுமின்றி, கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்துள்ளார்.
இந்நிலையில் 41 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை திரிஷா கூறியதாவது, எப்பொழுது நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று என்னிடம் யாராவது கேட்டால் எனக்கு தெரியாது என்று தான் சொல்வேன். நான் யாரை சந்திக்க போகிறேன் என்பதை பொறுத்தே என் திருமணம் நடக்கும். இந்த மனிதருடன்தான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டும் என்று எனக்கு தோன்ற வேண்டும்.
ஏனென்றால் எனக்கு விவகாரத்தில் நம்பிக்கையில்லை. எனக்கு திருமணம் ஆன பிறகு விவாகரத்து செய்ய வேண்டும் என்று விரும்பவில்லை. தவறான காரணங்களுக்காக சேர்ந்து வாழும் பல ஜோடிகளை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி வாழும் சிலர் தம்பதிகளை எனக்கு தெரியும். அதில் சிலர் என் நண்பர்களாகவும் இருக்கின்றனர்.அவர்கள் சந்தோஷமாகவே இல்லை பிள்ளைகள் குடும்பத்தார் பெரியோர்களுக்காக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற திருமண பந்தத்தில் இருக்க நான் எப்போதுமே விரும்பவில்லை. எனக்காக சரியான நபர் வந்ததும் அவரை நான் திருமணம் செய்து கொள்வேன். அதற்காக நான் காத்திருப்பேன். அப்படி காத்திருந்தும் எனக்கு திருமணம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அப்படி திருமணம் நடக்காவிட்டால் அது துரதிஷ்டவசமானது அல்ல. அது நடக்கவில்லை, அவ்வளவுதான் என்று நடிகை திரிஷா கூறியிருக்கிறார்





