- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த தீபாவளிக்கு நான் அதை செய்திருக்கிறேன், நீங்களும் அதை செய்யணும் - தனது ரசிகர்களுக்கு நடிகை...

இந்த தீபாவளிக்கு நான் அதை செய்திருக்கிறேன், நீங்களும் அதை செய்யணும் – தனது ரசிகர்களுக்கு நடிகை திரிஷா வேண்டுகோள்!

- Advertisement -

நடிகை திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்த தீபாவளிக்கு நான் ஒரு சிறப்பான காரியத்தை செய்கிறேன். மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு உணவுக்கான ஆதரவை வழங்குகிறேன். வெறும் 1000 ரூபாயில் மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் முழுவதும் உணவளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அது 30 நாட்களுக்கு வயிறு நிறைந்த உணவும் மகிழ்ச்சியான தருணங்களும் ஆகும். இந்த தீபாவளிக்கு நீங்களும் என்னுடன் ஏன் இணைய கூடாது? 1000 ரூபாய் வழங்கி ஒரு நாயின் உணவுக்கு ஆதரவளியுங்கள். அவற்றின் வாழ்க்கையில் ஒரு சிறிய மகிழ்ச்சியை கொண்டு வாருங்கள். ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நிதி உதவி செய்யுங்கள். இந்த தீபாவளியை அவர்களுக்கும் சிறப்பானதாக மாற்றுவோம். இனிய தீபாவளி வாழ்த்துகள் என்று நடிகை திரிஷா கூறியிருக்கிறார்.

சற்று முன்