- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்கள்தான் எனது இன்ஸ்பிரேஷன்... மூத்த நடிகையை குறிப்பிட்டு மனம் நெகிழ்ந்த திரிஷா... ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்...

நீங்கள்தான் எனது இன்ஸ்பிரேஷன்… மூத்த நடிகையை குறிப்பிட்டு மனம் நெகிழ்ந்த திரிஷா… ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் மிக முக்கியமானவராக இருப்பவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சி இருக்கும் அவர் மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போதும் அவர் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் நடித்து, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நடப்பாண்டு மட்டுமே அஜித்துடன் அவர் ஜோடி சேர்ந்த இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி விட்டன. அதில் விடாமுயற்சி திரைப்படத்தில், திரிஷாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்திலும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக முடித்து கைதட்டலை பெற்றார்.

- Advertisement -

இதேபோல் லியோ திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. இப்படி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் அவருக்கு, இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்த திரைப்படம் 96. காதலைக் கருப்பொருளாகக் கொண்ட அந்த திரைப்படத்தில், ஜானு கதாபாத்திரத்தில் நடித்து நம்மை உருக வைத்தார் திரிஷா.

சொல்லப்போனால் அவர் ஜானுவாக அந்த திரைப்படத்தில் வாழ்ந்தார் என்றே கூறலாம். மஞ்சள் சுடிதாரில் அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தன. தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில், அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி பார்த்திருக்கும் திரிஷா அதனை பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வசூல்மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. பாசிட்டிவிட்டியாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிக நன்றாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் திரிஷா.

அது மட்டுமல்ல படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரனையும் பாராட்டி இருக்கிறார். நான் சந்தித்த நாள் முதலே அவர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் கூறியிருக்கிறார் திரிஷா. ஆரம்ப காலகட்டங்களில் திரிஷா துணை நடிகையாக வலம் வந்தது இங்கு பலருக்கும் தெரியும். சொல்லப்போனால், பிரசாந்த் மற்றும் சிம்ரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஜோடி திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போய் இருப்பார் திரிஷா. இதேபோல் லேசா லேசா திரைப்படத்தில் திரிஷா சிம்ரன் என இரண்டு பேர் நடித்திருப்பார்கள்.

- Advertisement -

சற்று முன்