- Advertisement -
Homeபொழுதுபோக்குநிஜ வாழ்க்கையிலும் அவன் நிறைய நடிப்பான், என்கிட்டயே அவன் நடிப்பான் - பிரபல இயக்குனரை பங்கமாய்...

நிஜ வாழ்க்கையிலும் அவன் நிறைய நடிப்பான், என்கிட்டயே அவன் நடிப்பான் – பிரபல இயக்குனரை பங்கமாய் கலாய்த்த இசைஞானி இளையராஜா!

- Advertisement -

தமிழில் ஒரு உருவாகி வரும் லெனின் பாண்டியன் என்ற படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் கங்கை அமரன் கதை நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரோஜா நடிக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமார் மகனுமான தர்ஷன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

சென்னையில் நடந்த லெனின் பாண்டியன் பட விழாவில் கலந்துகொண்டு இசைஞானி இளையராஜா பேசினார். அப்போது நடிகர் சிவாஜி கணேசனின் நேரம் தவறாமையை குறிப்பிட்டு இளையராஜா புகழ்ந்து பேசினார். அப்போது தனது தம்பி தங்கை அமரன் குறித்தும் இளையராஜா பேசி கலாய்த்தார்.

- Advertisement -

இளையராஜா பேசுகையில், அவன் நிஜ வாழ்க்கையிலும் நல்லா நடிப்பான். என்கிட்டயே அவன் நடிப்பான் என்றும் கலாய்த்தார். மேலும் கங்கை அமரனின் மகன் இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில், என் அப்பா நடிக்கும் போது ஓவர் ஆக்ட் பண்ணுவார். ஆனால் இந்த படத்துல நல்லா நடிச்சிருக்கிறார்

அவர் கிட்ட வேலை வாங்குவது ரொம்பவும் கஷ்டம். இந்த பட இயக்குனர் பாலா சிறப்பாக அதை செய்திருக்கிறார். எங்க அப்பாவை இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை. படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே துரைராசு கேரக்டராக தான் அவர் தெரிகிறாரே தவிர எந்த இடத்திலும் கங்கை அமரன் தெரியவே மாட்டார்.

- Advertisement -

விஜய் அஜித் இருவரையும் சேர்த்து நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் லண்டன் போகாமல் இங்கேயே இருந்துட்டேன். ஒரு ரசிகனாக எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் பெரிய அளவில் ரசிகர்களின் போட்டிகள் இருந்தாலும் அவர்களுக்குள்ளே ஒரு அழகான நட்பு இருக்கு.

இப்போ நம்ம முதல்வர் விஜய் தொழிலதிபர் சந்திப்புக்காக லண்டன் சென்றிருந்தாலும் சரியான நேரத்தில் அங்கு சென்று அஜீத்தின் கார் பந்தயத்தை பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைப்பதை ஒரு நண்பனுக்கு கொடுக்கும் மரியாதையாகவே நான் பார்க்கிறேன். தல மற்றும் தளபதி இரண்டு பேரை நினைத்தும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று வெங்கட் பிரபு பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்