தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சூர்யா விக்ரம் ரவிமோகன் என முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிற மொழிகளிலும் திரிஷா தொடர்ந்து நடித்து வருகிறார்.
லேசா லேசா படம்தான் திரிஷா நாயகியாக அறிமுகமான முதல் படம். அதன் பிறகு பல படங்களில் திரிஷா நடித்த நிலையில் விக்ரம் நடித்த சாமி படம் மாமி கேரக்டரில் திரிஷாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கில்லி ஆறு உனக்கும் எனக்கும் 96 பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் திரிஷாவுக்கு பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.
குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களிலும் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு திரிஷாவின் மார்க்கெட் எகிறியது. தொடர்ந்து தமிழில் லியோ விடாமுயற்சி குட்பேட் அக்லி தெலுங்கில் விஸ்வம்பரா மலையாளத்தில் ஐடென்டி என பல படங்களில் நடித்தார். சூர்யாவுடன் அவர் கருப்பு படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா இன்னும் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். திருமணம் செய்துக்கொள்ளாமல் நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் நடிகை திரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பிறகு அந்த திருமணம் நின்று போய்விட்டது.
இதற்கிடையே தமிழில் பிரபல நடிகர் ஒருவருக்கும் இவருக்கும் நெருக்கமான நட்பு இருப்பதாகவும் ஒரு தகவல் நீண்டகாலமாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கோவாவில் நடந்த பிரபல மலையாள நடிகை திருமணத்துக்கு இருவரும் தனி விமானத்தில் சென்று வந்ததும் இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலானதும் குறிப்பிடத்தக்கது. அந்த நடிகருடன் 6 படங்களில் திரிஷா இதுவரை நடித்திருக்கிறார். ஒரு அயிட்டம் பாடலுக்கும் அவருடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. திரிஷாவின் வருங்கால கணவர் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் என்றும் ஆஸ்திரேலியாவில் பிஸினஸ் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அவரை மணந்து கொள்ள திரிஷா ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. இருதரப்பு பெற்றோரும் கலந்து பேசிய நிலையில் விரைவில் திரிஷாவுக்கு திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை பலமுறை திரிஷா திருமணம் குறித்த வதந்திகள் வந்துவிட்டன. இதுவும் அதுபோல்தானா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.





