- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படத்தில் நடிகை திரிஷா கேரக்டர் குறித்து வெளியான தகவல்… சம்பளம் இத்தனை கோடியா என்று...

தக்லைஃப் படத்தில் நடிகை திரிஷா கேரக்டர் குறித்து வெளியான தகவல்… சம்பளம் இத்தனை கோடியா என்று வாய்பிளந்த ரசிகர்கள் – கமல்தான் தாராள மனசுக்காரர் ஆச்சே…

- Advertisement -

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இந்த ஆண்டில் 5 மாதங்களில் அவர் நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி ஐடென்டி என்ற 3 படங்கள் வெளியாகி விட்டன. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த தக்லைஃப் படம் வரும் 5ம் தேதி வெளியாக உள்ளது.
அந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகை திரிஷாவை பொருத்தவரை 20 ஆண்டுகளுக்கு மேலாக தன் பயணத்தை சிறப்பாக செய்து வருகிறார். இடையிடையே சின்ன சின்ன சரிவுகள் இருந்தாலும் இன்றும் அவர் டாப் லெவலில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்துக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திரிஷாவுடன் சினிமாவுக்குள் வந்த பல நடிகைகள் இப்போது அம்மா அக்கா அண்ணி சித்தி கேரக்டர்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில நடிகைகள் டிவி சீரியல்களில் நடிக்கின்றனர். அந்தளவுக்கு 40 வயது கடந்த நடிகைகளால் ஹீரோயினாக தாக்கு பிடிக்க முடியாத நிலையில், இன்னும் திரிஷா நாயகியாக அசத்திக்கொண்டு இருக்கிறார்.

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே திரிஷா நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி ஐடென்டி படங்கள் வெளியான நிலையில் அடுத்து தக்லைஃப் படம் சில தினங்களில் திரைக்கு வருகிறது. அதே போல் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஜோடியாக திரிஷா நடித்த விஸ்வம்பரா என்ற தெலுங்கு படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.

- Advertisement -

மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான வேட்டை கருப்பு படத்திலும் சூர்யாவுக்கு திரிஷா தான் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷா வக்கீலாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆக அடுத்த 3 படங்கள் திரிஷா நடிப்பில் விரைவில் திரைக்கு வருவதால் இப்போதைக்கு 2025ம் ஆண்டில் 6 படங்கள் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கின்றன.

வருகிற 5ம் தேதி வெளியாக உள்ள தக்லைஃப் படத்தில் நடிகை திரிஷா பாடகி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திராணி என்பது அவரது கேரக்டர் பெயர் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷாவின் சம்பளம் ரூ. 12 கோடி என்கின்றனர். மணிரத்னம் தயாரிப்பாளர் என்றால் ரூ. 3 கோடி கூட தர மாட்டார். கமல்ஹாசன் தயாரிப்பாளர் என்பதால் அள்ளி வழங்கி விட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்