தமிழ் சினிமாவில் எப்போதுமே சர்ச்சைகளுக்கும் பிரச்னைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர் பெற்ற ஒரு நடிகை யார் என்றால் அதில் முதலிடம் பிடிப்பவர் நடிகை வனிதா விஜயகுமார் தான். நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளா மூத்த மகள். வம்பு சண்டை செய்வதிலும் வாக்குவாதம் செய்வதிலும் அவருக்கு நிகர் யாருமில்லை என்றே ரசிகர்கள் சொல்வார்கள்.
குறிப்பாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வந்த அவர் செய்த அலப்பறைகளும் அட்ராசிட்டிகளும் பொதுவெளியில் குடும்பத்தினருடன் அவர் செய்த சண்டை சச்சரவுகளும் சில டிவி நிகழ்ச்சிகளில் அவர் செய்த சண்டைகளும் இணையத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியவை. திருமண வயதில் அவருக்கு ஜோவிகா என்ற பெண் இருக்கிறார்.
இந்த நிலையில் நான் ஏற்கனவே 3 திருமணம் செய்துவிட்டேன். 4வது திருமணம் செய்ய தயாராகி வருகிறேன் என்றும் கலாட்டா செய்தவர். சமீபத்தில் அவரது மகள் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் ஒரு படத்தை டைரக்ட் செய்திருந்தார். மலையாள கவர்ச்சி படங்களை காட்டிலும் அதிக ஆபாசம் நிறைந்த அந்த படத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது, என்னுடைய முதல் காதல் குறித்து பேச வேண்டுமென்றால் என்னால் இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை முதன் முதலில் காதலித்தது யார் என்றோ அல்லது நான் யாரை முதல் முதலில் காதலித்தது என்றோ என்னால் வெளியே சொல்லவே முடியாது.
அப்படி நான் உண்மையைச் சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடே அதிர்ந்து விடும். அதனால் நான் அதை சொல்லாமல் மௌனமாக இருப்பதே நல்லது. அதை சொல்லாமலேயே பல ஆண்டுகளை நான் கடந்து வந்து விட்டேன். என்னுடைய நினைவுகள் எப்போதுமே எனக்குள் மட்டும் தான் இருக்கும். இந்த ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர் என 2 பேருக்குமே மிக நன்றாக தெரியும் என்று வனிதா விஜயகுமார் சஸ்பென்ஸாக பதில் கூறியிருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் முதன் முறையாக சந்திரலேகா என்ற படத்தில் கதாநாயகியாக படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் இப்போதைய தமிழக முதல்வர் நடிகர் விஜய் தான். அவர் பெயரை சொன்னால் தான் தமிழ்நாடே அதிர்ந்துவிடும் என்கிற நோக்கத்தில் இப்படி ஒரு பதிலை வனிதா விஜயகுமார் சொன்னதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே இளையராஜா வீட்டுக்கு நான் போக வேண்டியவள் என்றும் ஒருமுறை அவர் கூறியதால், அந்த அர்த்தத்தில் சொன்னாரா என்பதும் ரசிகர்களுக்கு குழப்பமாக உள்ளது.





