நடிகர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த நேரத்தில் நடிகர் விஜயும் திரிஷாவும் ஒரே மேட்சிங் ஆடையில் ஒரே காரில் வந்து திருமண விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்குள் மிக நெருக்கமான தொடர்பு இருப்பதாக எல்லோருமே பேசிய நிலையில் அதற்கு விஜய் திரிஷா எந்த ரியாக்சனும் செய்யவில்லை.
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் விஜய் – திரிஷா குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் சில விஷயங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 20ம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வருகிற ஜூன் 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். காணொளியில் ஆஜராக வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிய நிலையில், வருகிற ஜூன் 15ம் தேதி விஜய் சங்கீதா இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விஜய் திரிஷா குறித்து மூத்த நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதா விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, விஜயை எனக்கு நன்றாக தெரியும். அவரும் நானும் சந்திரலேகா படத்தில் ஒன்றாக நடித்தோம். அப்போது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் வாங்கிய சம்பளத்தை விடவும் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் குறைவு. அதனை இப்போதுதான் நான் வெளியே சொல்கிறேன்.
அதேபோல் அந்த சமயத்தில் எனக்கு ஃபிளைட்டில் டிக்கெட் போடுவார்கள். விஜய்க்கு ரயிலில் டிக்கெட் போடுவார்கள். அப்போதுதான் கஷ்டம் என்றால் என்னவென்று விஜய்க்கு தெரியும் என அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் என்னிடம் கூறுவார். திரிஷாவை பொருத்தவரை அவர் எல்லோருக்கும் நல்ல தோழி. அவரது சர்க்கிள் வேறு என்னுடைய சர்க்கிள் வேறுதான். இருந்தாலும் எங்களுக்குள் நல்ல பழக்கம் உள்ளது. சினிமாவை தாண்டி நாங்கள் நிறைய பழகி இருக்கிறோம்.
நான் போன் செய்யும்போது திரிஷா தியேட்டரில் இருந்தால், போன் கட் செய்துவிட்டு நான் இப்போது தியேட்டரில் இருக்கிறேன். முடித்துவிட்டு அழைக்கட்டுமா? இப்போது எதுவும் அவசரமா? என்று கேள்வி கேட்பார். அவ்வளவு நல்லவர் திரிஷா. எல்லோரும் திரிஷாவின் கதையை பேசுகிறார்கள். அவர்கள் எல்லோரது கதையும் எனக்கு தெரியும் என்று வனிதா விஜயகுமார் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





