- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அப்பவே தேவயானி கிட்ட சொன்னேன், அவங்க கேட்கலை… என் மகளை அவங்க மகளோட கம்பேர்...

நான் அப்பவே தேவயானி கிட்ட சொன்னேன், அவங்க கேட்கலை… என் மகளை அவங்க மகளோட கம்பேர் பண்ணலாமா? – விளாசித் தள்ளிய நடிகை வனிதா விஜயகுமார்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இணையத்தில் சர்ச்சைகள், விமர்சனங்களில் அடிக்கடி சிக்கி கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள். பல படங்களில் நடித்திருக்கிறார். 3 திருமணங்கள் செய்து விவாகரத்தும் செய்திருக்கிறார்.

விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருமுறை போட்டியாளராக பங்கேற்ற வனிதா விஜயகுமார் பல அலப்பறைகளை செய்தார். அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இப்போது தனது மகள் ஜோவிகா தயாரித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் ராபர்ட் மாஸ்டர் வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானி கலந்துக்கொண்டார். அப்போது மேடையில் தேவயானி நின்றுக்கொண்டிருந்த போது வனிதா விஜயகுமார் மேடையில் சேரில் அமர்ந்துக்கொண்டு இருந்தார். இதுதான் தேவயானிக்கு வனிதா விஜயகுமார் தருகிற மரியாதையா என்ற விமர்சனம் எழுந்தது. இது இணையத்திலும் வைரலானது.

இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது, நான் தமிழ் சினிமாவில் நடிகையான அறிமுகமான அதே காலகட்டத்தில்தான் தேவயானியும் அறிமுகமானாங்க. நானும் தேவயானியும் நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகிறோம். தேவயானியும் நானும் நீ வா போ என்று ஒருமையில் சொல்லும் அளவில்தான் எங்களுடைய பழக்கம் இருந்து இருக்கிறது.

அந்த பிரமோஷனில் கூட தேவயானியை வந்து நான் உட்காரச் சொன்னேன். அவங்க தான், இல்ல நீ தான் இந்த படத்துக்கு முக்கியம். அதனால நீ உட்காரு. நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்று சொல்லிட்டு இருந்தாங்க. நான் அப்பவே சொன்னேன். நீ அங்க நிற்கும்போது நான் உட்கார்ந்து இருக்கிறேன் என்று எவனாவது திட்ட போறான்னு சொன்னேன். அதேபோல கடைசியில் திட்டிவிட்டார்கள்.

எதுக்காக இப்படி கம்பேர் பண்றாங்கன்னு தெரியல. அதுபோல தேவையானி மகளோடு என்னோடு மகளை கம்பேர் பண்றாங்க. என்ன நடந்தது என்று தெரியாமல் பேசிட்டு இருக்காங்க. பொதுவா நம்முடைய குழந்தைகளாக இருந்தாலும் ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு கம்பேர் பண்ணக்கூடாது. ஆனா இவங்க தேவயானி மகளோடு என்னுடைய மகளை கம்பேர் பண்ணுவது எனக்கு வருத்தமாக இருக்கு என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்