- Advertisement -
Homeபொழுதுபோக்கு2023 ஆம் ஆண்டில் அதிக படங்களில் நடித்து முதலிடத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா... அட...

2023 ஆம் ஆண்டில் அதிக படங்களில் நடித்து முதலிடத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா… அட இவரா என ஆச்சரியப்படும் ரசிகர்கள்…

- Advertisement -

2023 ஆம் ஆண்டின் இறுதியில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இன்னும் வருடப் பிறப்பிற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்கள் குறித்தும், அதன் வசூல் விவரம் குறித்தும் பல சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுபோக கடந்த வாரம் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர் நடிகைகள் குறித்தும் விவரங்கள் வெளியாகி இருந்தது.

அதுமட்டுமில்லாமல் திரையரங்குகளும் தங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன படங்கள் குறித்த விவரங்களையும், அதில் முதல் பத்து இடங்களைப் பிடித்த காவியங்கள் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். அது போக சிறந்த நடிகர் நடிகைகள் குறித்த பேச்சும் இணையதளங்களில் எழுந்துள்ளது. இந்த வருடம் நடிகர் விஜய்க்கு வாரிசு மற்றும் லியோ என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல் அஜித்திற்கு துணிவு படம் பொங்கலன்று ரிலீஸ் ஆனது. தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு, ஜெயிலர் திரைப்படம் வந்து மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. கடந்த ஆண்டு பிரின்ஸ் படம் கொடுத்த தோல்வியால் துவண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு, இந்த முறை மாவீரன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை கொடுத்தது. இதேபோல் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படமும், சிம்பு நடிப்பில் பத்து தல படமும் வெளியாகின.

இந்த ஆண்டு சூர்யாவுக்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு அதிக திரைப்படங்களில் நடித்த நடிகையாக முதல் இடத்தில் வரலட்சுமி சரத்குமார் இருக்கிறார். இவர் தமிழில் மட்டும் மைக்கேல், கன்னித்தீவு, கொன்றால் பாவம், வி3, மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, கோட்ட பொம்மாளி, ஏஜென்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக இருப்பது நடிகை மகிமா நம்பியார். சந்திரமுகி 2, ரத்தம், 800 உள்பட நான்கு திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். இதில் சோகம் என்னவென்றால் இந்த இரண்டு நடிகைகளுக்கும் வெளியான எந்த திரைப்படமும் பெரிய அளவில் பேசப்படவே இல்லை. இதில் மகிமா நம்பியார் மலையாளத்தில் நடித்த ஆர் டி எக்ஸ் திரைப்படம் மட்டும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

இதனிடையே அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்ததற்கு முன்னணி நடிகைகளும் இதன் பட்டியலில் வந்து வருகின்றனர். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் இந்த வருடம் நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் 2, லியோ உட்பட மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இதே போல் நயன்தாராவுக்கு அன்னபூரணி, இறைவன் உள்பட மூன்று திரைப்படங்களும் சமந்தாவுக்கு இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.

சற்று முன்