- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் திரைப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்டிஆர்... மேடையிலேயே நாயகன் வெளியிட்ட சூசக அறிவிப்பு... சம்பவத்திற்கு...

தமிழ் திரைப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்டிஆர்… மேடையிலேயே நாயகன் வெளியிட்ட சூசக அறிவிப்பு… சம்பவத்திற்கு தயாராகும் டைரக்டர்…

- Advertisement -

தெலுங்கு திரை உலகத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சிரஞ்சீவி தொடங்கி பாலையா, நாகார்ஜுன், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, வெங்கடேஷ், பிரபாஸ், ராம்சரண், விஜய தேவரகொண்டா, நானி என இந்த பட்டியலை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்திருக்கின்றனர்.

இதில் ஜூனியர் என்டிஆருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று கூறலாம். அவரது ஒவ்வொரு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் போது, நிச்சயம் திருவிழா கோலம் காணும். அண்மையில் ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

- Advertisement -

இதில் ராம்சரணுடன் கைகோர்த்து ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். தொடர்ந்து அவரது நடிப்பில் தேவாரா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அனிருத் இதற்கு இசை இசையமைத்திருக்க படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் வார் 2 திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. ஹிந்தி நடிகர் கிருத்திக் ரோஷன், க்யாரா அத்வானி உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் டிராகன் எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாகவம்சி தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். இதனை ஜெயிலர் திரைப்பட இயக்குனர் நெல்சன் டைரக்ட் செய்ய இருக்கிறார்.

நெல்சன் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் தெலுங்கு நடிகர் பாலையா இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இருப்பினும் பிற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளிவரவில்லை. இதனை முடித்துவிட்டு அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் உடன் கைகோர்க்கிறார் நெல்சன். 2026 ஆம் ஆண்டு பிற்பாதியில் இதற்கான சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்