- Advertisement -
Homeபொழுதுபோக்குஹேமா கமிட்டி அறிக்கை குறித்து ஆவேசப்பட்ட நடிகை விசித்ரா, ரஜினிகிட்ட ஏன் இதைப் பத்தி பேசறீங்க...

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து ஆவேசப்பட்ட நடிகை விசித்ரா, ரஜினிகிட்ட ஏன் இதைப் பத்தி பேசறீங்க என்றும் கேள்வி – நடிகர் சங்கத்துல சொன்னாலும் நோ யூஸ் என்கிறாரே?

- Advertisement -

தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை விசித்ரா. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கேரளாவில் தனது கணவர் மற்றும் மகன்களுடன் செட்டிலாகி விட்டார். முத்து, பெரிய குடும்பம், வில்லாதி வில்லன் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்தாண்டில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக விசித்ரா பங்கேற்றார். அப்போது அவர் 10 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் தெலுங்கு படம் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவம் குறித்து வெளிப்படையாக கூறினார். தெலுங்கு பட ஹீரோ ஒருவர், தன்னை இரவு ரூமுக்கு வருமாறு அழைத்தார்.

அதை நான் அலட்சியப்படுத்தியதால் பலவிதங்களில் என்னை டார்ச்சர் செய்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் என் உடம்பில் பல இடங்களில் அந்த ஹீரோ கை வைத்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த போது அங்கிருந்த நடன இயக்குனர் என்னை கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கூறிய போது, என்னை சமதானப்படுத்தினர்.

தெலுங்கில் அந்த ஹீரோ பெரிய ஆள் என்றும், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்றும் என் புகாரை கண்டுக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். அந்த நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணா தான் என்று வலைதளங்களில் இந்த விவகாரம் வைரலானது. அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் ராதாரவி, செயலாளர் சரத்குமார்தான் என்றும் பேசப்பட்டது.

இப்போது ஹேமா கமிட்டி அறிக்கை கேரளா சினிமாத்துறையில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நடிகை விசித்ரா கூறியிருப்பதாவது, ஹேமா கமிட்டி குறித்து ரஜினியிடம் பேசினால் பதில் சொல்ல மாட்டார். இந்த பிரச்னையை அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவிடம் கொண்டு சென்று கேள்வி எழுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் பல முன்னணி நடிகர்கள் வாய்திறக்க மறுக்கின்றனர்.

அதற்காக அவர்களிடம் சென்று இதுபற்றி பேசுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்க முடியாது. சம்பவம் நடந்த போதே சொல்லி இருக்கலாமே என்கின்றனர். ஆனால் எனக்கு அது நடந்த போது, அப்போதே போய் நடிகர் சங்கத்திலும், போலீசிலும் புகார் கொடுத்தேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று நடிகை விசித்ரா கூறியிருக்கிறார்.

சற்று முன்