- Advertisement -
Homeபொழுதுபோக்குவெளிநாடு செல்ல விரும்பாத ஒரே நடிகர் கவுண்டமணி, அதற்கு இப்படி ஒரு காரணமா? - உண்மைையை...

வெளிநாடு செல்ல விரும்பாத ஒரே நடிகர் கவுண்டமணி, அதற்கு இப்படி ஒரு காரணமா? – உண்மைையை போட்டுடைத்த பிரபல நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவுண்டமணி. கடந்த 1980 90களில் கவுண்டமணி செந்தில் காமெடிக்காகவே ஓடிய படங்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன. கவுண்டமணியின் டயலாக் டெலிவரியை இன்று வரை எந்த காமெடி நடிகராலும் பீட் செய்ய முடியவில்லை என்பதே உண்மை. இப்போதும் கவுண்டமணி நடிப்பை திரையில் காண ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

ஆனால் 85 வயதான நிலையில் நடிகர் கவுண்டமணி நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார். கடந்த வாரத்தில் அவரது மனைவி சாந்தி காலமானார். நடிகர் கவுண்டமணிக்கு 2 மகள்கள் உள்ளனர். கவுண்டமணியை பொருத்த வரை மற்ற நடிகர்களை விட மிக வித்யாசமானவர். தனது குடும்பம் குறித்த தகவல்களை வெளியிட மறுத்தவர். அதே போல் டிவி பத்திரிகை என எதிலும் பேட்டி தர விரும்பாதவர்.

- Advertisement -

நடிகர் கவுண்டமணி குறித்து பிரபல காமெடி நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகர் கவுண்டமணி நிறைய வெளிநாட்டு கார்களை வாங்கியிருக்கிறார். தனது வீட்டு வாசலில் அந்த கார்களை வரிசையாக நிறுத்தி அழகு பார்ப்பார். ஆனால் அதிகமாக அந்த கார்களை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல மாட்டார்.

அதே போல் வெளிநாடுகளுக்கு அதிகமாக செல்ல விரும்பாத ஒரே நடிகரும் கவுண்டமணிதான். ஊருவிட்டு ஊருவந்துன்னு ஒரு படம் சிங்கப்பூர்ல போய் எடுத்தாங்க. அந்த ஒரு படத்துக்கும் மட்டும்தான் போனார். எத்தனையோ வெளிநாட்டு வித்தகர்கள் வந்து அவருக்கு விருது கொடுக்க வெளிநாட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க. ஆனா கவுண்டமணி போக மறுத்துட்டார்.
ஏன் அமெரிக்காவில் வந்துதான் விருது வாங்கணுமா? நான் இங்கேயே பெரிய காமெடி நடிகன்பா, போப்பா என்று அவர்களிடம் கூறி அனுப்பி விடுவார்.

- Advertisement -

இப்படி அமெரிக்கா கனடா என பல வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வந்தும் வெளிநாடுகளுக்கு செல்லவே விரும்பாதவர் நடிகர் கவுண்டமணி. அப்படி அழைக்க வந்த சிலரை கவுண்டமணி திட்டி அனுப்பியும் இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். ஜப்பானில் கல்யாணராமன் படத்திற்காகவும் கவுண்டமணி ஜப்பானுக்கு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்றாலே பல மணி நேரம் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். அதன் காரணமாக கவுண்டமணி வெளிநாடுகளுக்கு விமானம் பயணம் செல்ல அச்சம் காரணமாக மறுத்திருக்கலாம். அல்லது வெளிநாட்டில் நம்மூர் உணவு வகைகள் கிடைக்காது என்பதாலும் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் சிரமப்பட வேண்டாம் எனவும் அவர் மறுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்