- Advertisement -
Homeபொழுதுபோக்குபரத் நடித்த கேரக்டரில் ஜீவி பிரகாஷ்குமார், வில்லனாக சரத்குமார் - காம்போவே மிரட்டுதே…- அடங்காதே படம்...

பரத் நடித்த கேரக்டரில் ஜீவி பிரகாஷ்குமார், வில்லனாக சரத்குமார் – காம்போவே மிரட்டுதே…- அடங்காதே படம் ரிலீஸ் எப்போது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். தொடர்ந்து அவரது இசையில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி முன்னணி இசையமைப்பாளராக மாறினார். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன் ஜீவி பிரகாஷ்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களை தந்த ஜீவி பிரகாஷ்குமார் ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறினார். குப்பத்து ராஜா பென்சில் செம ஜெயில் நாச்சியார் சிவப்பு மஞ்சள் பச்சை என பல படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. கடைசியாக அவரது 25வது படமாக கிங்ஸ்டன் சமீபத்தில் வெளியாகி பிளாப் ஆனது.

இந்நிலையில் ஸ்ரீ கிரீன் ப்ரொடக்சன் சார்பில் தயாரிப்பாளர் எம்எஸ் சரவணன் தயாரிப்பில் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அடங்காதே என்ற படத்தில் நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் உள்ள அரசியல் சூழலை விறுவிறுப்பாக சொல்லும் கதைக்களத்தில் அடங்காதே படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக சுரபி நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகை மந்த்ரா பேடியும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர்கள் யோகி பாபு தம்பி ராமையா ஆகியோரும் இந்த படத்தில் உள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் கெஸ்ட் ரோலில் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

அடங்காதே படம் குறித்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி கூறியதாவது, இது ஒரு அரசியல் திரில்லர் படமாகும். சமகால அரசியல் குறித்து இந்த படம் பேசுகிறது. இருசக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜீவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்திருக்கிறார். அரசியல் தலைவராக சரத்குமார் நடித்திருக்கிறார். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிகர் சீமான் நடித்திருக்கிறார் என்று கூறினார்.

இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள ஜிவி பிரகாஷ் குமாரே படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் என்ற படத்தில் பரத் ஒர்க் ஷாப் மெக்கானிக் ஆக நடித்திருப்பார். ஜீவி பிரகாஷ்குமாரும் இந்த படத்தில் அதே கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்