- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்டூடியோவில் அதிதி ஷங்கரை பார்த்ததும் கடுப்பாகி சண்டை போட்ட சிவகார்த்திகேயன், வைரல் வீடியோ

ஸ்டூடியோவில் அதிதி ஷங்கரை பார்த்ததும் கடுப்பாகி சண்டை போட்ட சிவகார்த்திகேயன், வைரல் வீடியோ

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சாய் பல்லவி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மாவீரன்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை “மண்டேலா” புகழ் மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். பரத் சங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க ரெட் ஜெயன்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடவுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படக்குழு ஒரு கலகலப்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மடோன்னே அஸ்வின் சிவகார்த்திகேயனை பாட வைப்பதற்காக ஸ்ரேயா கோஷல் உங்களுடன் இணைந்து பாட தயாராக இருப்பதாக பொய் சொல்லி ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைக்கிறார்.

அதே போல் அதிதி ஷங்கரிடம் சித் ஸ்ரீராம் உங்களுடன் பாட தயாராக இருப்பதாக கூறி அவரை அழைக்கிறார். இருவரும் மிக ஆர்வத்தோடு பாடுவதற்காக ஸ்டூடியோவிற்கு வரும்போதுதான் அவர்களுக்கு தெரிகிறது அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று. சிவகார்த்திகேயனும் அதிதி ஷங்கரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு சண்டை இடுகிறார்கள். இந்த கலகலப்பான வீடியோவை படக்குழு வெளியிட்டதற்கான காரணம் என்னவென்றால் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஆகியோரின் குரலில் “வண்ணாரப்பேட்டையிலே” என்று ஒரு பாடல் இத்திரைப்படத்தில் உருவாகியிருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே “மாவீரன்” திரைப்படத்தில் “சீனா சீனா” என்ற பாடல் முதல் சிங்கிளாக வெளியான நிலையில் தற்போது சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கரின் குரலில் “வண்ணாரப்பேட்டையிலே” என்ற பாடல் இரண்டாவது சிங்கிள் பாடலாக வருகிற 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக இந்த கலகலப்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்