- Advertisement -
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ராஜன் வகையறா, அரசன் ஆகிய இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன. இதில் அரசன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ராஜன் வகையறா படப்பிடிப்பில் வெற்றிமாறன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எனினும் இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகி விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்போது ராஜன் வகையறா பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 50 சதவீதம் பாக்கி இருப்பதால் ராஜன் வகையறா பொங்கலை கடந்து அடுத்த ஆண்டு கோடை காலத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.





