- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் பட இயக்குனரால் செல்வராகவன் பட வாய்ப்பை தவறவிடும் அதிதி ஷங்கர்? ரொம்ப சங்கடமான நிலைமை

அஜித் பட இயக்குனரால் செல்வராகவன் பட வாய்ப்பை தவறவிடும் அதிதி ஷங்கர்? ரொம்ப சங்கடமான நிலைமை

- Advertisement -

“விருமன்”, “மாவீரன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்துகொண்டிருக்கிறது. தற்போது அதிதி ஷங்கர், அதர்வா தம்பி ஆகாஷ் ஹீரோவாக நடித்து வரும் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறதாம்.

இதனை தொடர்ந்து செல்வராகவன் “7ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க உள்ளாராம். வருகிற ஆகஸ்து மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம். இதில் முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் சோனியா அகர்வால் கதாநாயகி இல்லை. பல நாட்களாக கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் “7ஜி ரெயின்போ காலனி 2” திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது அதிதி ஷங்கர் ஏற்கனவே விஷ்ணுவர்தன் படத்தில் நடித்து வருகிறார். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறுகிற நிலையில் எப்படி “7ஜி ரெயின்போ காலனி 2” திரைப்படத்தில் நடிப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை “7ஜி ரெயின்போ காலனி” திரைப்படத்தில் இருந்து அதிதி ஷங்கர் விலக வாய்ப்புள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் ஒரு பக்கம், அதிதி ஷங்கர் இல்லாத பகுதிகளை முதலில் படமாக்கி முடித்த பிறகு அதன் பின் அதிதி ஷங்கர் இடம்பெறும் காட்சிகளை அதற்கு அடுத்த மாதம் படமாக்க வாய்ப்புண்டு என்றும் கூறுகின்றனர்.

சற்று முன்