- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்களுக்கு தகுதி உள்ளதா? அப்புறமா நீங்க உங்க இரக்க குணத்தை காட்டுங்க - கவிஞர் தாமரை...

அவர்களுக்கு தகுதி உள்ளதா? அப்புறமா நீங்க உங்க இரக்க குணத்தை காட்டுங்க – கவிஞர் தாமரை செய்த அட்வைஸ்!

- Advertisement -

திரைப்பட கவிஞர் தாமரை ஒரு பதிவில் கூறியிருப்பதாவது என்னுடைய பலம், பலவீனம் இரண்டுமே என் அதிகப்படியான இரக்க குணம்தான். யாருக்காவது துன்பம் என்றால் நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்ற எண்ணம்தான் முதலில் வரும். பல சமயம் என் எல்லையைத் தாண்டிப் போய் உதவி செய்திருக்கிறேன். இதில் காயம்பட்ட கதைகளெல்லாம் உண்டு. பெருந்தன்மை என்பது மிக மிக நல்ல குணம்தான். ஆனால் அதை எப்போதும் பாத்திரமறிந்து பிச்சை இடு என்ற பொன்மொழியோடே சேர்த்துப் படிக்க வேண்டும். நம் உதவியைப் பெறுவதற்கு நாம் கசிந்து உருகுவதற்கு அவர்களுக்குத் தகுதி உண்டா? என்று ஆராய்ந்தே உதவிகள் செய்ய வேண்டும் என்பதே அனுபவம். எனக்குக் கற்றுத் தந்த பாடம் என்று கவிஞர் தாமரை அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்