- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் தயாரிக்க ஆசைப்பட்டு வந்தவரிடம் உலக நாடுகளை சுத்திப் பார்க்க சொன்ன இயக்குனர் அகத்தியன் -...

படம் தயாரிக்க ஆசைப்பட்டு வந்தவரிடம் உலக நாடுகளை சுத்திப் பார்க்க சொன்ன இயக்குனர் அகத்தியன் – இது வேற லெவலா இருக்குதே…?

- Advertisement -

இன்று தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக கொண்டாடப்படுபவர் நடிகர் அஜீத்குமார். அடுத்து அவர் நடிக்க உள்ள ஏகே 64 படத்துக்கு ரூ. 180 கோடி சம்பளம் கேட்கிறார். 6 மாதங்களாக வெளிநாடுகளில் நடந்துவரும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். இந்த அளவுக்கு அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு காரணமாக இருந்த படங்களில் ஒன்று காதல் கோட்டை.

நடிகர் அஜீத்குமார் நடிக்க வந்த காலகட்டத்தில் சில படங்கள்தான் அவரது சினிமா பயணத்தில் திருப்புமுனையாக இருந்தது. அதில் மிக முக்கியமான படம் இயக்குனர் அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை படம்தான். அதே போல் நடிகை தேவயானிக்கும் இந்த படம்தான் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி அவரை முன்னணி நடிகையாக மாற்றியது.

- Advertisement -

இயக்குனர் அகத்தியன் வான்மதி கோகுலத்தில் சீதை விடுகதை காதல் கவிதை காதல் சாம்ராஜ்யம் செல்வம் ராமகிருஷ்ணா நெஞ்சத்தை கிள்ளாதே என பல படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். தெலுங்கிலும் சில படங்களை இயக்கி உள்ளார். இவரது மூத்த மகள் விஜயலட்சுமி சென்னை 28 அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் அகத்தியன் கூறியதாவது, ஒரு தயாரிப்பாளர் என்கிட்ட வந்து நான் நிறைய பணம் வைத்திருக்கிறேன். நம்ம ஒரு படம் பண்ணுவோம் என்று சொன்னார். அதற்கு நான் அவர்கிட்ட, வெளிநாடுகள் எல்லாம் சுத்தி பார்த்து இருக்கீங்களா என்று கேட்டேன்.

- Advertisement -

நல்லபடியா பாஸ்போர்ட் எடுத்துட்டு போயிட்டு குடும்பத்தோடு உலக நாடுகளை சுத்தி பார்த்துட்டு வாங்க என்றும் சொன்னேன். வாழ்க்கையில் சம்பாதிச்சு உலக நாடுகளை சுற்றி பார்த்தோம் என்றாவது இருக்கும் என்றும் அவருக்கு அட்வைஸ் ஆக சொன்னேன். ஒரு தொழிலோட நுணுக்கங்கள் தெரியாமல் தயாரிப்பாளர்கள் சினிமாவுக்குள் படம் தயாரிக்க ஆசைப்பட்டு வரக்கூடாது.

எனக்கு என்னவென்றால் தேவையில்லாமல் ஒருத்தருடைய காசை வாங்கி போட்டு படம் எடுக்கக் கூடாது. என்னால நஷ்டமான ஒரே தயாரிப்பாளர் நான் மட்டும்தான். என்னை வைத்து படம் பண்ணிய மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் நல்லா சம்பாதித்து இருக்கிறார்கள் என்று இயக்குனர் அகத்தியன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்