தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினி கமல் சரத்குமார் என பல நட்சத்திர ஹீரோக்களின் படங்களை இயக்கியவர். படையப்பா முத்து அவ்வை சண்முகி படங்களில் வரிசையில் சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் நட்புக்காக சமுத்திரம் நாட்டாமை போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர். இப்போது நடிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் நடிகர் சரத்குமார் இருவரும் பங்கேற்றுப் பேசினர். அப்போது கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, நட்புக்காக படம் ஷூட்டிங் நடத்த ஏற்பாடுகளை செய்து விட்டோம். அப்போது பார்லிமென்ட் தேர்தலில் திமுக கூட்டணியில் எம்பிக்கு போட்டியிட்ட சரத்குமார் தோற்றுப் போய்விட்டார்.
எலக்சன் ரிசல்ட்டுக்கு மறுநாள் நட்புக்காக படத்தின் ஷூட்டிங். அவர் வருவாரா மாட்டாரா என்று எனக்கு யோசனையாக இருந்தது. ஏனென்றால் எல்லா நடிகர்களும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருந்தோம். தேர்தலில் எம்பி தேர்தலில் தோல்வியடைந்த சரத்குமாருக்கு மிகவும் வேதனையாக இருக்குமே என்று நானும் கவலைப்பட்டேன்.
ஆனால் சொன்னபடி அன்று நட்புக்காக படப்பிடிப்பு வந்து விட்டார். சகஜமாக பேசி எல்லோரிடமும் பழகினார். தேர்தலில் தோல்வி குறித்து எதுவுமே பேசவில்லை. அந்த படத்தில் இரட்டை வேடம். இதில் வயதான கேரக்டருக்காக பற்களில் கருப்பு பூசி தலைக்கு வெள்ளையடித்து மேக்கப் எல்லாம் கரெக்டாக ஒத்துழைத்து சிறப்பாக நடித்தார்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தேர்தலில் தோற்றுப் போய் முதல் நாளில் அவர் வந்த அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்தது பெரிய விஷயம். நட்புக்காக படத்தை பார்த்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாட்டாமை படத்தை மிஸ் பண்ணி விட்டோம். இந்த படத்தை விட்டு விடவே கூடாது என்று முடிவு செய்து என்னை எப்படியோ தேடி பிடித்து விட்டார்.
நட்புக்காக படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்காக அவர் ஏற்கனவே நடித்து வந்த 3 படங்களை நிறுத்தி விட்டு இந்த படத்தில் நடித்தார். அந்தளவுக்கு நட்புக்காக படம் பெரிய வரவேற்பை பெற்றது. சிலருக்கு புகை பிடிப்பது மது குடிப்பது என அடிமையாக இருப்பார்கள். அந்த மாதிரி உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக இருப்பது என்பதுதான் சரத்குமாரின் அடிட் ஆக உள்ளது என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அதில் கூறியிருக்கிறார்.





