- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை வைத்து வியாபாரம் பண்ணவோ அதிகாரத்தை அடையவோ நினைத்தால் அதுதான் மிகப்பெரிய பிரச்னை - விஜய்...

அவரை வைத்து வியாபாரம் பண்ணவோ அதிகாரத்தை அடையவோ நினைத்தால் அதுதான் மிகப்பெரிய பிரச்னை – விஜய் பட டைரக்டர் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் எச் வினோத். அவர் இயக்கிய சதுரங்க வேட்டை வலிமை துணிவு தீரன் அதிகாரம் 1 போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்ற படங்களாக இருந்தன. அவரது இயக்கத்தில் உருவான ஜனநாயகன் படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இந்த படத்தின் நாயகன் விஜய் இப்போது தமிழக முதல்வராக உள்ள போதும் ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. 5 மாதங்களாக இந்த படம் முடங்கிப் போயுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் எச் வினோத் கடவுள் நம்பிக்கை குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, நான் நிறைய வாட்டி மாலை போட்டு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வந்திருக்கிறேன். 6 அல்லது 7 முறை நான் போயிருக்கிறேன். கடவுள் இருக்கு இல்லே அந்த டாபிக்குள்ளே நான் போக மாட்டேன்.

எனக்கு கடவுள் வேணுமா இல்லையா என்று நான் யோசித்தால் எனக்கு கடவுள் தேவைப்படுது. ஏனென்றால் கடவுள் இல்லாமல் வாழ்வதற்கு ஒரு தெளிவும் தைரியமும் தேவைப்படுகிறது. நான் இன்னும் அந்த பகுதிக்குள் போகவில்லை. அந்த அளவுக்கு வாழ்க்கை குறித்த ஒரு தெளிவும் தைாியமும் எனக்கு வரவில்லை.

- Advertisement -

அதனால் என்னுடைய பிரச்னைகளில் இருந்து சிக்கல்களில் இருந்து என்னை நகர்த்திக் கொள்வதற்கு எனக்கு கடவுள் தேவையாக இருக்கிறார். அதனால் நான் கடவுளை கும்பிடுவதன் வழியாக மத்தவங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லே. நான் கடவுளை வைத்து வியாபாரம் பண்ணவோ கடவுளை வைத்து ஒரு அதிகாரத்தை அடையவோ இல்லை.

கடவுளை வைத்து ஒருவரை வெறுக்கவோ அல்லது பிரிக்கவோ முயற்சி பண்ணும்போதுதான் கடவுள் பிரச்னையாக மாறுகிறார். ஆகவே எனக்கு கடவுள் என்பவர் கணக்கு பாடத்தில் வருகிற எக்ஸ்க்கு ஒரு ரோல் இருக்கும். கணக்குல நம்ம பிராப்ளத்தை எக்ஸ் வந்து சால்வ் பண்ணும். அந்த மாதிரி கடவுள் எனக்கு இருக்கிறார் என்று இயக்குனர் எச் வினோத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்