மலையாள சினிமாவில் இருந்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் அவர் நடித்துள்ள நிலையில் தமிழில் பொன்னியின் செல்வன் படம் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். நல்ல நடிப்பாற்றல் மிக்க நடிகையாக அவர் தன்னை வெளிப்படுத்தினார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்களில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இந்த படங்களுக்கு முன்பாக ஜகமே தந்திரம் புத்தம் புது காலை உள்ளிட்ட சில படங்களிலும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
தொடர்ந்து கேப்டன் கட்டா குஸ்தி அம்மு குமாரி உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான கமல்ஹாசன் சிம்பு திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக்லைஃப் படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இவர் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்த மாமன் படமும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
தொடர்ந்து கட்டா குஸ்தி 2 திரைப்படமும் 50 கோடி ரூபாய் வசூலை குவித்து அந்த படத்தின் கதாநாயகியான ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடையை வைத்து பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
இதற்கு தற்போது ஐஸ்வர்யா லட்சுமி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, ஒரு பெண்ணின் ஆடையிலோ உடல் அமைப்பிலோ மட்டும் பண்பாடு இல்லை. பிறரிடம் நாம் நடந்து கொள்ளும் விதத்திலேயே பண்பாடு இருக்கிறது. நாட்டின் ஜிடிபி வளர்ச்சி பற்றியோ கைவிடப்படும் பெற்றோர்கள் பற்றியோ பேச இங்கு யாரும் இல்லை.
ஆனால் என் ஆடையைப் பற்றி மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாக விவாதிக்கிறீர்கள்? ஆரம்பத்தில் அதை சிரித்து தான் கடந்தேன். ஆனால் என் உடையை பற்றி இத்தனை தீவிரமாக விவாதிக்கும் இந்த சமூகத்தின் போக்கு என்னை உலுக்கி விட்டது என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





