- Advertisement -
Homeபொழுதுபோக்குஜீன்ஸ் படத்தில் நடிக்க மறுத்த 2 ஹீரோக்கள், அதுல ஒரு ஹீரோ நிலைமை இப்போ படுமோசம்...

ஜீன்ஸ் படத்தில் நடிக்க மறுத்த 2 ஹீரோக்கள், அதுல ஒரு ஹீரோ நிலைமை இப்போ படுமோசம் – கடைசியாக பிரசாந்துக்கு அடித்த லக்கி பிரைஸ்

- Advertisement -

நடிகர் ஷங்கர் இயக்கத்தில் எடுக்கப்படும் படங்கள் என்றாலே, அதற்கென சில தனத்துவமான அடையாளங்கள் இருக்கும். குறிப்பாக அந்த படங்கள், பல ஆண்டுகளுக்கு பேசப்படும் படமாக அமையும். மிகவும் கவனமாக, நேர்த்தியாக, பல விதங்களிலும் ரசிக்கக்கூடிய வகையில்தான் அவரது திரைக்கதை, காட்சிகள் அமைப்பும் இருக்கும்.

ஜெண்டில்மேன், காதலன், முதல்வன், ஜீன்ஸ், இந்தியன், அந்தியன், ஐ, நண்பன், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களை எத்தனை முறை பார்த்தாலும் அதில் வரும் காட்சிகள் சலிப்பே தட்டாது. அந்தளவுக்கு சுவாரசியமான காட்சிகளை கொண்டு அவரது படம் கட்டமைக்கப்பட்டு இருக்கும். பாடல்களும் மிக சுவாரசியமாக உருவாக்கப்பட்டு இருக்கும்.

- Advertisement -

இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துவரும் பிரபல நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்யும் போது எந்த இயக்குநர் படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நிச்சயம் மணிரத்னம், பாரதிராஜா பெயர்களோடு கண்டிப்பாக இயக்குநர் ஷங்கர் பெயரையும் சொல்கின்றனர். இதுதான் ஒரு இயக்குநராக ஷங்கருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

ஆனால் இப்படிப்பட்ட சிறந்த ஒரு இயக்குநர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அவரே நடிப்பதற்கு அழைத்தும் நடிக்கும் சான்ஸை மறுத்தால், மிஸ் செய்தால் அது அந்த நடிகர்களுக்கு தான் பிற்காலத்தில் பெரிய இழப்பாக போகிறது. கால்ஷீட் இல்லாமல் படத்தில் நடிக்க முடியாமல் போவது ஒரு விதம். ஆனால் வாய்ப்பிருந்தும் தன் விருப்பு, வெறுப்பு காரணமாக நடிக்க மறுப்பதும் ஒரு விதம். இதில் விருப்பமின்றி தான் அந்த நாயகர்கள் அந்த வாய்ப்பை மறுத்திருக்கின்றனர்.

- Advertisement -

கடந்த 1998ம் ஆண்டில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஜீன்ஸ். இந்த படத்தில் அண்ணன் தம்பியாக படத்தின் நாயகன் பிரசாந்த் இரட்டை வேடம், அவரது தந்தையாக நடித்த நாசர் இரட்டை வேடம் ஏற்றிருப்பர். படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடம் (ஒருவரே இருவராக அக்கா, தங்கை என ஏமாற்றி நடித்திருப்பார். லட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படம் செம ஹிட்டானது. ஷங்கரின் சிறப்பான படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.

ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் கேரக்டரில் முதலில் இயக்குநர் ஷங்கர் அணுகியது நடிகர் அப்பாஸ். அவர் நடிக்க சம்மதிக்காததால் அடுத்து ஷங்கர் பேசியது நடிகர் அஜீத்குமார். இரட்டை வேடத்தில், ஒரே மாதிரியாக நடிக்க பல தொழில்நுட்ப விஷயங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதால் அவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டார். அடுத்துதான் இந்த படத்தில் பிரசாந்த் நடித்து மிக பிரபல நடிகராக மாறினார். இப்போது அப்பாஸ் நடிக்க வாய்ப்பின்றி வீட்டில் சமையல் செய்துக்கொண்டு இருப்பதாக அவரே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்