- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது பிறந்த நாளை ஒருநாள் முன்னதாக எப்போதும் கொண்டாடும் இசைஞானி இளையராஜா, இந்த முறை அதுவும்...

தனது பிறந்த நாளை ஒருநாள் முன்னதாக எப்போதும் கொண்டாடும் இசைஞானி இளையராஜா, இந்த முறை அதுவும் இல்லையாம் – என்ன காரணம் தெரியுமா?

- Advertisement -

இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த ஒரு இசைக் கலைஞனாக தன்னை வெளிப்படுத்தி வெற்றிக் கண்டவர். தனிப்பட்ட மனிதராக அவரது செயல்பாடுகள், பலவிதமான மோசமான விமர்சனங்களை அவர் மீது ஏற்படுத்தினாலும், இசையை பொருத்த வரை எப்பவுமே அவர் ராஜாதான். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் அதே நேரத்தில், சமீப காலமாக நான் இசையமைத்த பாடல் எனக்கு மட்டுமே சொந்தம் என்று அவர் செய்து வரை அலப்பரை தான் அவர் மீதான வெறுப்புணர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஒரு கலைஞன் தன் படைப்பை மற்றவர்கள் கொண்டாடுவதை பார்த்து, பெருமைப்படாமல் இப்படி காசுக்காக மனிதர் பொறாமைப்படுகிறாரே என்றுதான் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

அதுவும், இளையராஜாவின் நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் டீசருக்கு, அவர் நோட்டீஸ் அனுப்பியதெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத செயல். அதுவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையே கேள்வி கேட்பது, இளையராஜா மாண்புக்கு உகந்த விஷயம் அல்ல என்று பலரும் திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது பேசிய இளையராஜா, இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் எனக்காக இல்லை. என்னை விரும்பும் மற்றவர்களுக்காக தான்.

- Advertisement -

நான் என் மகளை பறிகொடுத்து விட்ட காரணத்தால், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை சிறிதும் விரும்பவில்லை. ஆனால் உங்களுக்காக தான் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் என்று உருக்கமாக கூறியிருக்கிறார். இன்று பிறந்த நாள் காணும் இளையராஜாவை, திரையுலகம் சார்ந்த பலரும் வாழ்த்து தங்களது பதிவுகளை சமூக வலைதளங்களில் செய்து வருகின்றனர்.

உண்மையில், இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் நாளை ஜூன் 3ம் தேதி தான். ஆனால் அது திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால் ஒரு நாள் முன்னதாகவே, ஆண்டுதோறும் தன் பிறந்த நாளை கொண்டாடுவதை இளையராஜா வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்கு காரணம், இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டம் கொடுத்ததே கருணாநிதி என்பதால், இந்த மரியாதையை அவருக்கு இசைஞானி செய்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்