“விடாமுயற்சி” திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இப்போது தொடங்கும் அப்போது தொடங்கும் என்று அவ்வப்போது தகவல்கள் வருகிறதே தவிர ஒரு படப்பிடிப்பிற்கான முதல் அடியை கூட படக்குழுவினர் எடுத்து வைக்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாது, அஜித்தின் போட்டி நடிகரான விஜய், “லியோ” ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது தனது 68 ஆவது திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். ஆனால் இங்கு 62 ஆவது படமே இப்படி திணறுகிறது என்பதால் ரசிகர்கள் கவலையின் உச்சத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களின் தலையில் இடி விழுந்தது போல் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது அஜித் சில நாட்களுக்கு முன் நார்வே நாட்டிற்கு சென்று சென்னை திரும்பினார். அவர் சென்னை வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது மீண்டும் ஃபாரீனுக்கு கிளம்பி சென்றுவிட்டாராம்.

“விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்து மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது அஜித்குமார் ஃபாரீன் பறந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“விடாமுயற்சி” திரைப்படத்தின் Pre Production பணிகளை மகிழ் திருமேனி மிக மும்முரமாக செய்துகொண்டு வருகிறாராம். ஆனால் அஜித்திடம் முழு கதையையும் கூறினாரா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. ஒரு வேளை அஜித்திடம் முழு கதையையும் கூற வேண்டும் என்றாலும் அஜித் ஊரில் இருக்க வேண்டும் அல்லவா?





