- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்கள் இரண்டு குடும்பத்தையும் அவர்தான் தாங்குகிறார்.. அஜித் அப்படி ஒரு மனுஷன்.. நெகிழும் மாமனார்

எங்கள் இரண்டு குடும்பத்தையும் அவர்தான் தாங்குகிறார்.. அஜித் அப்படி ஒரு மனுஷன்.. நெகிழும் மாமனார்

- Advertisement -

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் அபுதாபியில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே அஜித்குமார் அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஷாலினியை காதலிக்க ஆரம்பித்தார். ஒரு எதிர்பாராத விபத்தில் ஷாலினி மருத்துவமனையில் அட்மிட் ஆக அஜித்குமார் அந்த நேரத்தில் ரொம்பவே கேர் எடுத்து பார்த்துக்கொண்டார். மேலும் ஒருமுறை ஷூட்டிங்கின்போது இயக்குநர் சரணிடம் விரைவில் படத்தின் ஷூட்டிங்கை முடியுங்கள் இல்லையென்றால் ஷாலினியை லவ் பண்ணிடுவேன் போல என ஓபனாக பேசிவிட்டார்.

- Advertisement -

அதனையடுத்து ஷூட்டிங் போய்க்கொண்டிருக்க இருவருக்குமே காதல் வளர்ந்து ஒருகட்டத்தில் காதலை வெளிப்படுத்தினர். அதனையடுத்து அஜித்குமார் ஷாலினியின் தந்தையிடம் பேச இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு அஜித் – ஷாலினி திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். கோலிவுட்டின் பேவரைட் ஜோடியாக திகழ்ந்துவருகிறார்கள் அவர்கள். எப்படி என்றால் யாரேனும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் நாங்கள் அஜித் – ஷாலினி போல் வாழ்வோம் என்று சொல்லும் அளவுக்கு காதலோடு வாழ்கிறார்கள் இரண்டு பேரும்.

இந்நிலையில் ஷாலினியின் தந்தை அஜித் குறித்து வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ அஜித்குமாரும் ஷாலினியும் அமர்க்களம் படத்தில் நடித்தபோது காதலிகக் தொடங்கினார்கள். நேரடியாக அஜித் எங்களது வீட்டுக்கு வந்து என்னிடம் உங்கள் பொண்ணை திருமணம் செய்து தருகிறீர்களா என்று கேட்டார். ஷாலினிக்கும் அஜித்தை பிடித்திருந்தது. எனவே ஷாலினியின் விருப்பத்துக்கு தடை போடாமல் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டேன்.

- Advertisement -

அஜித் எப்போதுமே வேகம்தான். குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்கு வந்து கல்யாண தேதியை முடிவு செய்தார்கள். அன்று எப்படி சந்தோஷமாக இருந்தாரோ அதேபோல் இன்றும் இருக்கிறார். அதனால் இரண்டு குடும்பத்தினரும் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறார். இரண்டு குடும்பங்களுக்காக அவர் அவ்வளவு ஓடுகிறார். எங்கள் இரண்டு குடும்பங்களையும் அவர்தான் தாங்கிக்கொண்டிருக்கிறார்.

அஜித்துக்கும் ஷாலினிக்கும் ஜாதகம் பார்த்தபோது பத்து பொருத்தமும் பக்காவா இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான். அப்படியொரு ஜோடி அவர்கள். அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை இன்னொரு மகன். வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணீர் கொடுப்பதிலிருந்து சாப்பாடு பரிமாறுவதுவரை அவரேத்தான் செய்வார். அவர் அப்படி ஒரு மனுஷன்” என்றார்.

- Advertisement -

சற்று முன்