- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியின் முக்கியமான காட்சிகளை பார்த்த அஜித்குமார்... அடுத்த சில நிமிடங்கள் கழித்து ஏகேவின் ரியாக்சன் எப்படி...

விடாமுயற்சியின் முக்கியமான காட்சிகளை பார்த்த அஜித்குமார்… அடுத்த சில நிமிடங்கள் கழித்து ஏகேவின் ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா… என்னையா இப்படி பயமுறுத்துறீங்க…

- Advertisement -

2023 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது விடாமுயற்சி திரைப்படத்தின் அறிவிப்பு. பல முக்கிய திரைப்படங்களை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை எடுப்பதாக அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் அன்றைய தேதியிலேயே படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

 

- Advertisement -

கிரைம் திரில்லர் திரைப்படங்களை எடுப்பதில் பெயர் போன மகிழ் திருமேனி, அஜித்துடன் கை கொடுத்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்தது. ஆனால், படப்பிடிப்பு என்னவோ ஐந்து மாதங்கள் கழித்து அக்டோபர் இறுதியில் தான் தொடங்கப்பட்டது. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

 

- Advertisement -

இடையே படப்பிடிப்பில் சிறிது தொய்வு ஏற்பட்ட சூழலில், அஜித் குமார் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது அடுத்த படத்தை நோக்கி சென்று விட்டார். குட் பேட் அட்லி என இதற்கு பெயர் வைக்கப்பட, படமும் பொங்கலுக்கு ரிலீசாக அறிவிக்கப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதனால் அஜித் ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் விடாமுயற்சி என்ன ஆனது என்று விடாமுயற்சியுடன் கேள்வி எழுப்பியே வந்தனர். இந்த சூழலில், படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு முழு வீச்சில் முடிவடைந்தது. தற்போது ஹைதராபாத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இது ஒரு பக்கம் இருக்க விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் திரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிடுகிறது. ஆனால் வெறும் தெரிந்த தகவலையே போஸ்டருடன் படக்குழு வெளியிடுவதால் ரசிகர்கள் சலிப்படைந்துள்ளனர்.

 

படத்தில் இருந்து டீசர் ஏதாவது வெளியானால் நன்றாக இருக்கும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை, அஜித் குமாரிடம் இயக்குனர் மகிழ்திருமேனி காண்பித்துள்ளார். இதைப் பார்த்த ஏ கே, காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் படத்தின் அளவுக்கு பிரம்மாண்டமாக இருப்பதாக கூறி மகிழ் திருமேனியை பாராட்டி இருக்கிறாராம். இதைக் கேள்விப்பட்டு அஜித் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்