- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் சுட்டது 12 பேரை மட்டுமல்ல, 13வது ஆள் நான்தான் - நடிகர் விஜய் குறித்து...

அவர் சுட்டது 12 பேரை மட்டுமல்ல, 13வது ஆள் நான்தான் – நடிகர் விஜய் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் சிம்பு நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்த போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதுதான் வரலட்சுமி சரத்குமார் அறிமுகமான முதல் படம். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை வெற்றியை ரசிகர்களிடம் பெறவில்லை.

தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான படம் நானும் ரவுடிதான். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்தார். விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருந்தனர். ராதிகா சரத்குமார் ஆர்ஜே பாலாஜி அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. அதன்பிறகு 7 ஆண்டுகள் காதலித்த அவர்கள் பிறகு திருமணம் செய்துக்கொண்டனர். இதற்கிடையே தானா சேர்ந்த கூட்டம் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எல்ஐகே படம் வருகிற 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதாவது, போடா போடி படத்தின் இயக்குனராக நான் கமிட் ஆனபோது என்னுடைய வயது 22 தான். ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகும் போது எனக்கு 27 வயதாகி விட்டது.

- Advertisement -

அதுவரை அந்த படம் ரிலீஸ் ஆவதில் ஏதேனும் ஒரு தாமதம் நடந்து கொண்டே இருந்தது. படம் ரிலீஸாவதே பெரும்பாடாக இருந்தது. இறுதியாக நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படம் வெளியான போது நான் இயக்கிய போடா போடி படமும் ஒரு வழியாக வெளியானது. ஆனால் அங்கேயே என்னுடைய படம் முடிந்துவிட்டது.

அந்த மாபெரும் பிளாக்பஸ்டர் படத்துக்கு முன்னால் போடா போடி படம் நிற்க முடியவில்லை. துப்பாக்கி படத்தின் இடைவேளையில் நடிகர் விஜய் 12 நபர்களை சுட்டுக் கொல்வார். ஆனால் உண்மையில் அவர் சுட்டது 13 பேரை. அவர் அன்று சுட்ட 13வது வேறு யாருமில்லை. நான்தான் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த நேர்காணலில் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்