- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியில் கறுப்பான முடியோடு இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கும் அஜித்... அதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்......

விடாமுயற்சியில் கறுப்பான முடியோடு இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கும் அஜித்… அதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்… அப்படின்னா படம் நிச்சயம் ஹிட்தான் போலயே….

- Advertisement -

நடப்பாண்டு வெளியாகும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் விடா முயற்சி. கடந்த ஆண்டு மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது. அப்போதே படத்திற்கான டைட்டிலையும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்தது. ஆனால் விடாமுயற்சி என்ற பெயர் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

 

இப்போதும் வி வரிசையில் தான் படத்தை தலைப்பை வைக்க வேண்டுமா என்று அவர்கள் இணையத்தில் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அதேசமயம் விடாமுயற்சி என்ற டைட்டிலும் அஜித் படத்திற்கு எடுப்பாக இல்லை என்று அவர்கள் கூறினர். ஆனால் இதை எல்லாம் தயாரிப்பு நிறுவனமான லைக்கா காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

 

சரி ஷூட்டிங் தான் எப்போது ஆரம்பிக்கும் என்று அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்ப, அதற்கும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பதில் இல்லை. இந்தப் பக்கம் அஜித்தும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற, ரசிகர்கள் திண்டாடி போயினர். ஒரு வழியாக ஆறு மாதம் கழித்து படத்திற்கான வேலைகள் ஆரம்பமானது.

 

எடுத்த எடுப்பிலேயே அஜர்பைஜானுக்கு படக்குழுவுடன் சென்றார் இயக்குனர் மகிழ்திருமேனி. அப்போது முதல் இன்று வரை அங்கு தான் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இடையில் சில பிரச்சனை காரணமாக சூட்டிங் பணிகள் நிறுத்தப்பட்டன. பிறகு மீண்டும் அதற்கான வேலைகள் ஆரம்பமாக, அஜித்தும் தற்போது முழு ஈடுபாட்டுடன் படத்தில் நடித்து வருகிறார்.

 

இதில் அர்ஜுன், திரிஷா, ஆரவ் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். சில மலையாள நடிகர்களும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, படத்திற்கான முதல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அது அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. பின்னர் கடந்த வாரம் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்தது தயாரிப்பு நிறுவனம்.

 

இந்த நிலையில் நேற்று அஜித்துடன் த்ரிஷா இருக்கும் புகைப்படம் வெளியானது. அதில் அஜித் கறுப்பான முடியுடன் எடுப்பாக காட்சியளித்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் படு உற்சாகமாகிவிட்டனர். இந்த நிலையில் விடாமுயற்சியில் அப்படி அவர் இளமையாக தோன்றும் காட்சிகள் பிளாஷ்பேக்கில் வரும் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார். அஜர்பைஜான் நாட்டில் வரும் 23ஆம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைவதாகவும், இதன்பிறகு ஹைதராபாத்தில் எட்டு நாட்கள் சூட்டிங் பணிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடத்தப்படும் தனது மனைவியை கண்டுபிடிக்க கதாநாயகன் எடுக்கும் முயற்சிதான் விடாமுயற்சியின் கதை என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்