- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது அந்த மெகா ஹிட் படத்துல அஜித் நடித்திருக்க வேண்டியதா.. ச்ச மிஸ் ஆகிடுச்சே

என்னது அந்த மெகா ஹிட் படத்துல அஜித் நடித்திருக்க வேண்டியதா.. ச்ச மிஸ் ஆகிடுச்சே

- Advertisement -

கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். சம்பளமாக 100 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக இவரது நடிப்பில் துணிவு படம் வெளியானது. படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தை பொறுத்தவரை தான் உண்டு தனது வேலை உண்டு தனது குடும்பம் உண்டு என்று இருப்பவர். திரைப்படங்களில் நடிப்பது மட்டும்தான் தன்னுடைய வேலை அதற்கான ப்ரோமோஷனில் கலந்துகொள்வதோ இல்லை அது சம்பந்தமாக பேட்டி கொடுப்பதோ தன்னுடைய வேலை இல்லை என்பதில் கறாராக இருப்பவர். இந்தக் கண்டிஷன்களுக்கு தயாரிப்பு தரப்பு ஒத்துக்கொண்டதால்தான் அக்ரிமெண்ட்டிலேயே அவர் கையெழுத்து போடுவார் எனவும் ஒரு தகவல் உலாவுவது குறிப்பிடத்தக்கது.

படங்களில் நடிப்பது தவிர்த்து அஜித்துக்கு பைக் ஓட்டுவதில் அலாதி ப்ரியம். அதன்படி உலக சுற்றுப்பயணத்தை தற்போது அவர் மேற்கொண்டிருக்கிறார். நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அவர் தற்போது இரண்டாம் கட்டமாக நார்வே உள்ளிட்ட நாடுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அஜித் ஆரம்பத்திலிருந்தே திரைத்துறையில் ஒரு கால் ரேஸில் ஒரு கால் என வைத்தவர். அதன் காரணமாக திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறிய கதை எல்லாம் உண்டு. ஏன் பல மெகா ஹிட் படங்களையே தவறான கணிப்பால் தவறவிட்டவர். ஜீன்ஸ், ரன், ஜெமினி, நியூ, கஜினி, நந்தா, காக்க காக்க, நான் கடவுள் என அந்தப் பட்டியல் நீளும். இப்போது இன்னொரு மெகா ஹிட் படத்தையும் அவர் தவறவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான படம்தான் சாமி. ஆர்ட் பிலிம்களுக்கு மட்டுமே விக்ரம் முக்கியத்துவம் கொடுப்பார் என்ற பிம்பம் இருந்தபோது சாமி படத்தில் கமிட்டாகி அந்த பிம்பத்தை அடித்து சுக்கு நூறாக்கினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விக்ரமின் கரியரிலேயே மிகச்சிறந்த கமர்ஷியல் படம்; ஏன் தமிழ் சினிமாவிலேயே மிகச்சிறந்த கமர்ஷியல் படம் என்ற பெயரை சாமி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் கதையை முதலில் அஜித்திடம்தான் ஹரி சொன்னாராம். ஆனால் ஏதோ சில காரணங்களால் அவரால் சாமி படத்தில் நடிக்க முடியவில்லையாம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் ச்ச தல நடிச்சிருந்தா இன்னும் வேற லெவலில் படம் இருந்திருக்குமே. ஏன் மிஸ் செய்தார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

சற்று முன்