கடந்த மாதம் 31ம் தேதி, தீபாவளி பண்டிகை நாளில் வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
உலகம் முழுவதும் இதுவரை 321 கோடி ரூபாய் வசூலில் கடந்துள்ள அமரன் படம், 5வது வாரத்தில் திரையரங்குகளில் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடி ரூபாய்க்கு வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் அபார வெற்றியால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 55 கோடியாகவும், சாய்பல்லவி ரூ. 6 கோடியாகவும் உயர்த்தி விட்டதாக தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் ரூ. 321 கோடியை கடந்துள்ள அமரன் படம், வெளிநாடுகளில் மட்டும் அதாவது ஓவர்சீஸ் ரைட்ஸ் அடிப்படையில் இதுவரை 105 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படமே ரூ. 101 கோடி வசூலித்த நிலையில், அதையும் கடந்து ரூ. 105 கோடிக்கு சென்றுள்ளது. கமல் தயாரித்த படமே, கமல் படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது.
இந்த சூழலில், சிவகார்த்திகேயனின் ஓவர்சீஸ் மதிப்பு பெரிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஒரு ஏமாற்றம் தரும் நிகழ்வும் நடந்துள்ளது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் போதே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்திலும் நடிக்க துவங்கியிருந்தார். சில நேரங்களில் 2 படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி பங்கேற்றனர்.
ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க துவங்கிய சிறிது நாட்களிலேயே அந்த படத்தை வெளிநாட்டு உரிமையை, அதாவது ஓவர்சீஸ் ரைட்ஸ் அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் பாரஸ்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு ரூ. 12 கோடிக்கு விற்று விட்டது. ஆனால் இப்போது சிவகார்த்திகேயனின் ஓவர்சீஸ் ரைட்ஸ் வேற லெவலுக்கு மாறியிருக்கிறது.
அமரன் படம் ஓவர்சீஸ்களில் 105 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள நிலையில், ஷேர் மட்டுமே ரூ. 45 கோடி முதல், ரூ. 50 கோடி கிடைக்கிற சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒரு காலகட்டத்தில் ரூ. 12 கோடிக்கு சிவகார்த்திகேயன் நடித்த எஸ்கே 23 படத்தை விற்று கணிசமான லாபத்தை அந்த நிறுவனம் இழந்துள்ளது. ஓவர் சீஸ் உரிமத்தை குறைந்த விலைக்கு விற்றதால் இப்படி ஒரு ஏமாற்றம் ஆகி விட்டதே, என்று அந்த படக்குழுவும் தயாரிப்பு நிறுவனமும் பலத்த வருத்தத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.





