அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு லோகேஷன் பார்க்க அஜித்குமார் மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் சென்றிருந்தனர். அதன் பின் இரண்டு மூன்று நாட்களிலேயே அவர்கள் திரும்பிய நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

“விடாமுயற்சி” திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என செய்திகள் வருகின்றன.
“விடாமுயற்சி” திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அஜித்குமார் தனது உலக பைக் சுற்றுலாவான பரஸ்பர மரியாதை பயணத்தை தொடங்கவுள்ளார். ஏற்கனவே அஜித்குமார் இந்த பயணத்தின் முதல் கட்டமாக இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு நேபாள், பூடான் ஆகிய நாடுகளிலும் தன்னுடைய பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். வருகிற நவம்பர் மாதம் அவர் தனது பைக் சுற்றுலாவின் இரண்டாம் கட்டத்தை தொடங்கவுள்ளார்.

அஜித்குமாருக்கு இளம் வயதில் இருந்தே பைக் ரேஸ் மீது ஆர்வம் உண்டு. அவருக்கு ஒரு முறை விபத்து நடந்து அவரது முதுகில் பல ஆப்ரேஷன்களும் நடந்திருக்கிறது. ஆனாலும் பைக் ரேஸின் மீதுள்ள ஆர்வம் தீரவில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் தனக்கு சொந்தமாக “ஏகே மோட்டோ ரைட்” என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தை அஜித்குமார் தொடங்கினார். இந்த சுற்றுலா நிறுவனத்திற்கு பல வாடிக்கையாளர்கள் குவிந்து வருகிறார்களாம்.
இதனை தொடர்ந்து தற்போது அஜித்குமார் தனது நிறுவனத்திற்காக கிட்டத்தட்ட 10 பைக்குகளை விலைக்கு வாங்கவுள்ளாராம். இதில் ஒவ்வொரு பைக்கின் விலையும் 1.25 கோடிகள் என செய்திகள் வெளிவருகின்றன. இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





