- Advertisement -
Homeபொழுதுபோக்குபோர்ச்சுக்கல்லில் நடந்த கார் ரேஸ் பயிற்சி, மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜீத்குமார் - பதட்டமடைந்த...

போர்ச்சுக்கல்லில் நடந்த கார் ரேஸ் பயிற்சி, மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜீத்குமார் – பதட்டமடைந்த ரசிகர்கள், ஏகே சொன்ன அட்வைஸ்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் 2 தினங்களுக்கு முன் விடாமுயற்சி படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்களில் நடித்த முடித்த நடிகர் அஜீத்குமார் இப்போது கார் ரேஸ் போட்டிகளில் ஆர்வமாக கலந்துக்கொண்டு இருக்கிறார். துபாயில் கடந்த மாதம் துவங்கிய துபாய் 24எச் ரேஸ் பந்தயத்தில் அஜீத்குமார் ரேஸிங் அணி தலைவராக, தனது அணி கார் பந்தய வீரர்களுடன் அஜீத்குமார் கலந்துக்கொண்டார்.

ஆனால் பயிற்சியின் போது அஜீத்குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியதை அடுத்து, அஜீத்குமார் ஓட்டுனராக கார் ரேஸில் பங்கேற்காமல் போட்டியில் அணித் தலைவராக நீடித்தார். இதில் அஜீத்குமாரின் கார் ரேஸ் அணி போர்ஸ்சே 992 பிரிவில் 3ம் இடத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஏகே ரசிகர்கள் உற்சாமடைந்தனர். ஏகேவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தன.

இதைத் தொடர்ந்து அடுத்து போர்ச்சுக்கல்லில் கார் ரேஸ் பந்தயம் நடக்க உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் வரை 10 நாடுகளில் இந்த கார் ரேஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த மாதம் துபாயை தொடர்ந்து இப்போது போர்ச்சுக்கல் நாட்டில் கார் ரேஸ் நடக்கிறது. இதில் அஜீத்குமார் அவரது அணி வீரர்களும் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

போர்ச்சுக்கல்லில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்க நடிகர் அஜீத்குமார் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, மீண்டும் அஜீத்குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதையறிந்த ரசிகர்கள் பதட்டமும் பரபரப்பும் அடைந்தனர். இதுகுறித்து நடிகர் அஜீத்குமார் கூறுகையில், என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி நான் என்ன செய்கிறேன் என்று அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி.

இன்றைய பயிற்சியின் போது கூட எனது கார் விபத்தில் சிக்கியது. விபத்துக்குள்ளான காரை, மெக்கானிக் குழுவினர் சரிசெய்து விட்டனர் என்று அஜீத்குமார் கூலாக கூறியிருக்கிறார். போர்ச்சுக்கல்லில் நடக்கும் கார் ரேஸில் அஜீத்குமார் கலந்துக்கொள்ள பயிற்சி எடுத்த போது, கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் அஜீத்குமாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது அவரது ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

சற்று முன்