நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படங்களுக்கு தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாகவே பெரிய மார்க்கெட் இல்லை என்பதே கசப்பான உண்மை. விஜயை போட்டி நடிகராக காட்டியே அந்த பரபரப்பில் இத்தனை ஆண்டுகளாக அஜீத்குமாரும் எப்படியோ தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக தாக்கு பிடித்து வந்தார்.
கடைசியாக அஜீத்குமார் நடித்த 50வது படம் மங்காத்தா தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த 13 படங்களில் வீரம் வேதாளம் விஸ்வாசம் வலிமை போன்ற படங்கள் கவனம் பெற்றன. வணிகரீதியான லாபம் தந்த படங்களாக இருந்த போதிலும் கொண்டாடப்படும் வெற்றிப் படங்களாக இருக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு படத்தில் நடிக்க அஜீத்குமார் 185 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டார். 110 கோடி ரூபாய் வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் முன்வந்த நிலையில் பைனலாக ரூ. 150 கோடி என அஜீத்குமார் இறங்கி வந்தார். ஆனால் தயாரிப்பாளர் யாரும் நஷ்டமடைய விரும்பாமல் ஒதுங்கி கொண்டனர்.
இந்த சூழலில் அஜீத்குமாரே சொந்தமாக தனது படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். தனது மனைவி ஷாலினியை தயாரிப்பாளராக வைத்து தனது 64வது படம் டேர் டெவில் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் கட்டுப்பாட்டில் இருக்க, ஒரு ரூபாய் கூட அனாவசியமான தண்டச் செலவு இருக்க கூடாது என்பதில் அஜீத்குமார் மிக உஷாராக இருக்கிறார்.
வழக்கமாக ஐதராபாத்தில் தனது படங்களின் ஷூட்டிங்கை வைத்துக்கொண்ட அஜீத்குமாரால் தயாரிப்பாளர்களுக்கு இரட்டை செலவு ஏற்பட்டது. ஆனால் அவரது சொந்த தயாரிப்பு படம் என்பதால் சென்னையில் ஷூட்டிங்கை வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறாராம். மேலும் நயன்தாரா திரிஷா போன்ற நட்சத்திர நாயகிகள் இல்லாமல் குறைந்த சம்பளம் நாயகியை அஜீத்குமார் தேடி வருகிறார்.
மேலும் இந்த படத்தில் தனது மனைவி ஷாலினியை முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்கவும் அதன்மூலமும் தயாரிப்பு செலவை குறைக்க அஜீத்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற தயாரிப்பாளர் படம் என்றால் தண்டமாக எவ்வளவு பணம் செலவானாலும் அஜீத்குமாருக்கு கவலையில்லை. ஆனால் தனது சொந்த தயாரிப்பு என்றவுடன் ஒரு ரூபாய் கூட தண்டச்செலவாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்போ மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தா இரத்தமா ப்ரோ? என்று ரசிகர்கள் அஜீத்குமாரை கலாய்த்து வருகின்றனர்.





