- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அஜீத்குமார்? - உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா...

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அஜீத்குமார்? – உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா – பிரேமலதா பதில் சொல்வாரா?

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71 பல ஆண்டுகளாக உடல் நலமின்றி பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், அடிக்கடி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் அவரால் சரியாக பேச முடியாமல் போய்விட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். அடுத்த சில தினங்களில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.

- Advertisement -

உடல் மெலிந்த நிலையில், முக வடிவம் மாறி நடக்கவும், உட்காரவும் முடியாமல் சிரமப்பட்ட விஜயகாந்தை பார்த்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கதறி கதறி அழுதனர். இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா அறிவிக்கப்பட்டார். இதுதான் விஜயகாந்த் பங்கேற்ற கடைசி கூட்டமாக போய்விட்டது.

அதன்பின், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த் நேற்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார். இன்று மாலை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் மீது கொண்ட அன்பு, பாசத்தால் பல லட்சம் பேர் அவருக்கு நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தியதற்கு நன்றி. தீவுத்திடலில் கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உடனடியாக தேவையான வசதிகளை, ஏற்பாடுகளை செய்து உதவிய தமிழக அரசுக்கும் நன்றி.விஜயகாந்த் லட்சியத்தை நிறைவேற்ற சூளுரைப்போம் என்று அவர் பேசினார்.

இந்நிலையில், துபாயில் இருந்து நடிகர் அஜீத்குமார் போனில் அழைத்து, பிரேமலதாவிடம் துக்கம் விசாரித்து, ஆறுதல் கூறியதாகவும், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையா, இல்லையா என்பதை பிரமேலதா விஜயகாந்த் தான் சொல்ல வேண்டும். விஜய் நேரில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், அஜீத் வரவில்லை. அதன் காரணமாக சிலர் கிளப்பி விட்ட வதந்தியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்