- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் படத்தில் திடீரென நடிக்க மறுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - அட அது...

ரஜினிகாந்த் படத்தில் திடீரென நடிக்க மறுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – அட அது சூப்பர் ஹிட் படமாச்சே? அதுதான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிப்பில் ஜாம்பவானாக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பது பெரிய அபூர்வம். ஆனால் ரஜினிகாந்த் சிவாஜியுடன் விடுதலை படிக்காதவன் படையப்பா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த படமும் படையப்பா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படையப்பா படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் வழங்கியதும் ரஜினிகாந்த் தான். சிவாஜி கணேசன் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரே படமும் படையப்பா தான். ரஜினி சிவாஜி கணேசன் இணைந்து நடித்த விடுதலை படிக்காதவன் படையப்பா போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்கள்தான்.

- Advertisement -

கடந்த 1986ம் ஆண்டில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாயகனாக நடித்து வெளியான படம் மர்த். இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் தமிழில் ரீமேக் செய்தார். அந்த படம்தான் மாவீரன். இந்த படத்துக்கு இளையராஜா. ரஜினிகாந்த் அம்பிகா சுஜாதா தாராசிங் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடித்த மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் மல்யுத்த வீரர் தாராசிங் நடித்திருந்தார். ரஜினியின் அப்பாவாக நடித்த தாராசிங் ரஜினி குழந்தையாக இருக்கும் போது ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டு விடுவார். பிறகு படத்தின் இறுதியில் ரஜினியுடன் சண்டையிடவே அவரை களத்தில் இறக்கி விடுவர். அப்போதுதான் ரஜினி தனது மகன் என்பதே தாராசிங்குக்கு தெரிய வரும். இதுதான் மாவீரன் படத்தின் கதை.

- Advertisement -

ரஜினிகாந்த் நடித்த படங்களில் மாவீரன் மாஸ் ஹிட் படமாக இருந்தது. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம். இதில் ரஜினிக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார். ரஜினி குதிரை வண்டி ஓட்டும் தொழிலாளியாக நடித்திருப்பார். வெள்ளையர்களை எதிர்க்கும் ஒரு கதைக்களமாக மாவீரன் படம் இருந்தது.

முதலில் மாவீரன் படத்தில் தாராசிங் கேரக்டரில் கமிட் செய்யப்பட்டது நடிகர் சிவாஜி கணேசன்தான். இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதாக அப்போது விளம்பரங்களும் செய்யப்பட்டன. ஆனால் கதையில் தனக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. சில காட்சிகள் மட்டுமே வருவதால் அந்த படத்தில் நடிக்க பிறகு சிவாஜி கணேசன் மறுத்துவிட்டார். மேலும் அவர் மற்ற படங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். அதன்பிறகுதான் சிவாஜி கணேசன் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் தாராசிங் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்