- Advertisement -
Homeபொழுதுபோக்குவெயிட்டிங் லிஸ்ட்டில் 4 இயக்குனர்கள் - கார் ரேஸில் மட்டுமே ஆர்வம் காட்டும் நடிகர் அஜீத்குமார்,...

வெயிட்டிங் லிஸ்ட்டில் 4 இயக்குனர்கள் – கார் ரேஸில் மட்டுமே ஆர்வம் காட்டும் நடிகர் அஜீத்குமார், தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு கண்டிஷன் போடலாமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் ரிலீஸாகி ஓராண்டு கடந்தும் இன்னும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே அவரது அம்மா மோகனி மணி சமீபத்தில் மறைந்தார். அந்த துக்க நிகழ்வில் முதல்வர் விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் அஜீத்குமாருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

தனது அம்மா மறைந்த சில தினங்களில் மீண்டும் அஜீத்குமார் கார் ரேஸில் கலந்துக்கொள்ள வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அவரது முழு கவனமும் ஈடுபாடும் கார் ரேஸில் மட்டுமே இருந்து வருகிறது. அஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்குவதற்காக ஆதிக் ரவிச்சந்திரன் சிறுத்தை சிவா ஏஎல் விஜய் விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இயக்குனர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் அஜீத்குமார் அடுத்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து கார் ரேஸில் மட்டுமே கவனமாக இருந்து வருகிறார். இப்படி 4 இயக்குனர்கள் அதுவும் வெற்றிப் படங்களை தந்தவர்கள் ஆண்டுக்கணக்கில் அஜீத் குமாருக்காக காத்திருந்தும் அவர் சினிமாவில் நடிக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் அஜீத்குமார் படத்தை தயாரிக்க ஆர்வமின்றி உள்ளனர். ஏனெனில் பெரிய பட்ஜெட் பெரிய சம்பளம் என அஜீத்குமாருக்கு பெரிய அளவில் இப்போது மார்க்கெட் இல்லை.

- Advertisement -

மேலும் அவருக்கு போட்டியாளராக கருதப்பட்ட விஜயும் கட்சி தலைவராகி இப்போது முதல்வராகி விட்டார். அதனால் அஜீத்குமார் ரூ. 185 கோடி வரை சம்பளம் கேட்பதும் தயாரிப்பாளர்களுக்கு பலத்த அதிருப்தியை தருகிறது. இதனால் அவரது படம் தயாரிக்கவே பலரும் ஆர்வமின்றி உள்ளனர்.

இதற்கிடையே ஒரு சில வெளிமாநில சினிமா தயாரிப்பாளர்கள் அஜீத்குமார் படத்தை தயாரிக்க முன்வருகின்றனர். ஆனால் அவர் தனக்கான சம்பளத்தை துபாய் வங்கி கணக்கில் சேர்க்குமாறு கூறுகிறார். அதில் நடைமுறை சட்ட சிக்கல்கள் இருப்பதால் கார்பரேட் நிறுவனங்கள் அதற்கு சம்மதிப்பது இல்லை. இப்படி அஜீத்குமாரின் அடுத்த படம் துவங்குவது சிக்கலாக நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்