நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி படம் பலத்த ஏமாற்றத்தை தந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்திருக்கிறது.
இதுவரை வெளியான டீசர் டிரெய்லர் என இரண்டுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. மேலும் குட் பேட் அக்லி டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதே போல் டிரெய்லரும் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
இதற்கிடையே குட்பேட் அக்லி படத்தில் இருந்து ஓஜி சம்பவம் என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலும் அடுத்து காட் பிளஸ் யூ மாமே என்ற செகன்ட் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. மேலும் 3வது சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் குட் பேட் அக்லி படம் இப்போதே மாஸ் காட்டி வருகிறது.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் ஒரு முக்கிய சம்பவத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் செய்திருக்கிறார். அதாவது மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் நடிகர் அஜீத்குமார், எவ்வளவு நாள்தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது என்று டயலாக் பேசியிருந்தார். அதே டயலாக்கை தி கோட் படத்தில் ஒரு காட்சியில் விஜய் பேசியிருப்பார்.
அதே போல் குட் பேட் அக்லி படத்திலும் விஜய் பேசிய ஒரு டயலாக்கை, நடிகர் அஜீத்குமார் பேசுவது போல் காட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்படி படத்தின் இடைவேளையின் போது வாட் ப்ரோ, ஐ யம் பேடு என்று அஜீத்குமார் அந்த காட்சியில் பேசுகிறார். அப்போது படத்தில் இன்டர்வெல் வருகிறது. முதலில் இந்த வாட் ப்ரோ, இட் ஈஸ் ராங்க் ப்ரோ என நடிகர் விஜயை கலாய்த்தவர் நாம் தமிழர் கட்சி சீமான்தான். அவர்தான் ஒரு மேடையில் விஜயை இப்படி சொல்லி கலாய்த்தார்.
அதே டயலாக்கை நடிகர் விஜய், தனது கட்சி கூட்டத்தில் பேசும் போது, வாட் ப்ரோ, இட் ஈஸ் வெரி ராங்க் ப்ரோ என்று கூறியிருந்தார். இப்போது அதே டயலாக்கை வாட் ப்ரோ என அஜீத்குமார் குட்பேட் அக்லி படத்தில் இடைவேளை காட்சியில் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் டிரண்டிங் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.





