தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். அவர் இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சி திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்த படத்தில் அஜித்குமாருடன் திரிஷா ஆரவ் அர்ஜுன் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இன்னும் இந்த படத்துக்கான ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது. வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அஜித் – திரிஷா நடிக்க வேண்டிய இந்த பாடல் காட்சிகளை படம் பிடிக்க டைரக்டர் மகிழ்ச்சி திருமேனி திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்காக அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் இன்னும் சில தினங்களில் ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்பிச் செல்ல உள்ளனர். அங்கு 70 நாட்கள் குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. சண்டை காட்சிகள் பாடல்கள் முழுவதும் ஸ்பெயின் நாட்டிலேயே எடுக்க டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் ரஜினிகாந்த் நடித்த தர்பார், விஜயகாந்த் நடித்த ரமணா, விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்துக்கு சிங்க நடை என டைட்டில் கூறப்பட்டாலும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே நடிகர் அஜித்குமார், ஏ ஆர் முருகதாஸ் படத்தில் இதுவரை நடிக்கவில்லை. அதே போல் ஏ.ஆர். முருகதாஸும் அஜித்குமாரை வைத்து படம் இயக்க முன்வரவில்லை. இதற்கு முக்கிய காரணம், அஜித் குமார் நடிப்பில்தான் முதலில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி படம் உருவானது. ஒரு மாதத்துக்கு மேல் கஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார், பிறகு மொட்டையடித்து முகத்தில் தழும்புகள் வரைந்து கொள்ள வேண்டும் என்ற முருகதாஸ், அப்படிப்பட்ட கெட்டப்பில் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அதன் பிறகுதான் கஜினி படத்தில் நடிகர் சூர்யா நடித்தார். அதனால் கஜினி படத்தில் ஏ ஆர் முருகதாஸுக்கும் அஜித்குமாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மனக்கசப்பு காரணமாக இருவரும் அதன் பிறகு தமிழ் சினிமாவில் கூட்டணி அமைக்கவில்லை. அஜித்குமாரை வைத்து படம் இயக்க ஏ.ஆர். முருகதாஸும் விரும்பவில்லை. அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க அஜித்குமாரும் ஆர்வம் காட்டவில்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது.





