- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் நடிக்கும் 64வது படம்… டைட்டில் வைப்பதில் ஏற்பட்ட திடீர் சிக்கல் - ஏகே ...

அஜீத்குமார் நடிக்கும் 64வது படம்… டைட்டில் வைப்பதில் ஏற்பட்ட திடீர் சிக்கல் – ஏகே போட்ட திடீர் கண்டிசன்!

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் வினியோகஸ்தர் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்கிறார். குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இது அவர் இயக்கும் 2வது படமாகும். இந்த படத்துக்கு அனிருத் தான் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார்.

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக ஜனவரி மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் நடிகர் அஜீத்குமார் இந்த மாத இறுதியில் கார் பந்தயங்களை முடித்து விட்டு தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார். அதனால் அடுத்த மாதம் நவம்பரில் ஏகே 64 படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டுள்ளது. 4 மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படத்துக்கு டைட்டில் என்னவென்று முடிவாகி விட்டது. இதுவும் குட் பேட் அக்லி படத்தை போல ஆங்கில தலைப்புதான். அதில் கண்டிப்பாக வி வரவேண்டும் என்று நடிகர் அஜீத்குமார் கண்டிஷனாக படக்குழுவினரிடம் கூறியிருக்கிறார். வீரம் விஸ்வாசம் விவேகம் வேதாளம் என்ற வரிசையில் வி சென்டிமென்ட் தனது பட டைட்டில் இருக்க வேண்டும் என அஜீத்குமார் விரும்புகிறார்.

அந்த வரிசையில் வி எழுத்தில் ஆரம்பித்த விடாமுயற்சி படம் வணிக ரீதியாக விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் அஜீத்குமாரை பொருத்த வரை அந்த படம் தனக்கு மிகவும் பிடித்தமான மனதுக்கு நெருக்கமான ஒரு படமாகவே பார்க்கிறார். விடாமுயற்சி படம் ஹாலிவுட் படம் போல இருந்ததாக அஜீத்குமாரிடம் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியதால் விடாமுயற்சி படமும் அஜீத்குமாரை பொருத்த வரை ஒரு வெற்றிப்படமாக தான் பார்க்கிறார்.

- Advertisement -

அதே நேரத்தில் தமிழில் பெரிய ஸ்டார் நடிகர்கள் படம் என்றாலே ஓடிடி நிறுவனங்கள் ஆங்கில தலைப்புகள் அவசியம் என்று நிபந்தனை போடுகின்றனர். அந்த படங்களை இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிற மொழிகளிலும் வெளியீடு செய்வதால் ஓடிடி நிறுவனங்கள் தமிழ் படங்களுக்கு ஆங்கில டைட்டில் என்பதை கட்டாயமாக்கி வருகின்றன. அதனால் ஏகே 64 படத்துக்கும் ஆங்கில டைட்டில் உறுதியாகி விட்டது.

ஏகே 64 படத்தின் பூஜை நாளிலேயே டைட்டிலை அறிவித்து விடவும் படக்குழு முடிவு செய்துவிட்டது. ஆனால் படத்துக்கு வைக்கப்பட்ட ஆங்கில டைட்டில் ஏற்கனவே ஹாலிவுட் படத்துக்கு வைக்கப்பட்ட டைட்டிலாக இருப்பதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதற்கு முறையாக என்ஓசி வாங்கினால் மட்டுமே அந்த டைட்டிலை பயன்படுத்த முடியும். அதற்காக என்ஓசி வாங்கும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்