- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடுகிறேனா? விருப்பு வெறுப்புகளை மறந்து விடுங்கள் - இயக்குனர்...

தமிழக முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடுகிறேனா? விருப்பு வெறுப்புகளை மறந்து விடுங்கள் – இயக்குனர் சேரன் ஆவேசம்!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தலின் போது இயக்குனர் சேரன் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து சில பதிவுகளையும் இயக்குனர் சேரன் வெளியிட்டார். இது தவெக கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு விஜய் குறித்து எதிர்மறையான கருத்துகளை விமர்சனம் செய்ததற்காக வருத்தப்படுகிறேன் என்றும் இயக்குனர் சேரன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து 200 யூனிட் மின்சாரம் இலவசம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 2வது இடத்தில் இசைக்கப்பட்டது உள்ளிட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து பலரும் முதல்வர் விஜய் குறித்து விமர்சித்தனர்.

- Advertisement -

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் சேரன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சேரன் கூறியிருப்பதாவது, மக்களே அனைத்து மக்களையும் சேர்த்துதான் கட்சி பேதம் இன்றி சொல்கிறேன். நீண்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவரை நம்பி ஒரு பகுதி மக்கள் முதல்வர் என வாக்களித்து மறுபகுதி மக்கள் அதற்கு ஆதரவும் தந்து முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் பார்த்தாகி விட்டது.

மக்களும் முழுக்கவே அனைவரும் புதியவர்கள் வேண்டும் என்று தெரிந்துதான் இந்த வாக்கை அளித்திருக்கிறார்கள். பதவிப்பிரமாணம் முடிந்த உடனேயே விமர்சனங்களை முன் வைக்காமல் வாழ்த்திவிட்டு அமைதி காப்பதே நன்று. அதற்குள் தமிழ்த்தாய் பின்னால் போய்விட்டாள், 200 யூனிட் கரண்ட் என்னாச்சு என முழங்காமல் கொஞ்சம் வேலை செய்ய விடலாம்.

- Advertisement -

தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் விஜய் போட சொல்லி இருப்பாரா? 200 யூனிட் மின்சாரம் ஃப்ரீ என்பதில் என்ன குளறுபடி? இதெல்லாம் முதல் நாளிலேயே கேட்கலாமா? அவர்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் முறையாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். விஜய் முழுக்க முழுக்க புதியவர். அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய நாட்கள் எடுக்கும். பொறுத்திருங்கள். அவர் புரிந்து நன்றாக செயல்பட்டு விட்டால் நல்லது தானே? அப்படி இல்லையென்றால் மக்களே புரிந்து மாற்றி விடுவார்கள் தானே?

இதை நான் யாருக்கும் ஆதரவாகவும் வாசிக்கவில்லை. உடனே விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக்கூடாது. விருப்பு வெறுப்புகளை துறந்து பொதுவான ஓர் அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம் என்பதற்காகத்தான் இந்த பதிவு. முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள். நல்ல சமுதாய கட்டமைப்பை உருவாக்க உங்கள் அர்ப்பணிப்பை தாருங்கள் என்று இயக்குனர் சேரன் அந்த எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்