அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் ஓரளவு விமர்சனத்தை பெற்றது. அதே சமயம் வசூலில் துணிவு திரைப்படம் சக்கை போடு போட்டது.
அந்த சமயத்தில் துணிவை எதிர்த்து விஜயின் வாரிசு திரைப்படம் வெளியானது. ஆனால், விஜய் திரைப்படத்தை காட்டிலும் துணிவு படத்துக்கே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனியுடன் இணைந்தார் அஜித்.
இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. படத்தில் கிட்டத்தட்ட 90 சதவிகித சூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். தற்போது ஹைதராபாத்தில் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் அர்ஜுன் ஆரவ் திரிஷா ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அதுபோக சஞ்சய் தத்தும் படத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஒரே நாளில் நடக்கும் கதையாக விடாமுயற்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடிக்கிறாராம்.
அதாவது காணாமல் போன தனது மனைவியை கணவன் தேடி கண்டுபிடிப்பதே இந்த திரைப்படம் என்று கூறப்படுகிறது. திரிஷாவை அர்ஜுன் கும்பல் கடத்த, அதன் பிறகு என்னென்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் விடா முயற்சி திரைப்படத்தின் ஒன் லைன் என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அனேகமாக இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது தள்ளிப் போகிறதாம். 2025 ஆம் ஆண்டு தான் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த திரைப்படத்திற்குப் பிறகு விடாமுயற்சி வெளியாகும் என்று சினிமா விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.





