- Advertisement -
Homeபொழுதுபோக்குகூடிய சீக்கிரம் அது நடந்துடும்... அஜீத்குமார் குறித்த கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் குமார் சொன்ன நச்...

கூடிய சீக்கிரம் அது நடந்துடும்… அஜீத்குமார் குறித்த கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் குமார் சொன்ன நச் பதில் – இது கொல மாஸ் சாரே…!

- Advertisement -

எப்போதுமே மாஸ் இயக்குனர், மாஸ் நடிகர் இணைந்து ஒரு படம் உருவானால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதனால்தான் முக்கிய இயக்குனர்கள், முக்கிய நடிகர்கள் கூட்டணி சேரும்போது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே பெரிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் கிளம்பி விடுகிறது. படமும் மிகப்பெரிய வெற்றியை தொட்டு விடுகிறது.

அதனால்தான் இந்த விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் கவனமாக இருக்கிறார். கமல் விஜய் அஜீத் போன்ற ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர்களை அழைத்து, தன் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பளிக்கிறார். அப்படிதான் சிறுத்தை சிவா நெல்சன் லோகேஷ் கனகராஜ் போன்றவர்களின் படங்களின் ரஜினிகாந்த் நடித்தார்.

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக இருக்கிறார். மாநகரம் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்த அவர் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை டைரக்ட் செய்து வருகிறார். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.

நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி குட்பேட் அக்லி என 2 படங்களுமே ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றன. பொங்கலுக்கு எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் குட்பேட் அக்லி ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

இப்போது துபாயில் நடந்துவரும் கார் பந்தயத்தில் கலந்துக்கொண்டுள்ள நடிகர் அஜீத்குமார் வருகிற அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து 10 நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்று விட்டு சென்னை திரும்புகிறார். அடுத்து அவர் சிறுத்தை சிவா வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் கார் பந்தயங்களை முடித்துவிட்டு அவர் அடுத்து கைகோர்க்கப் போவது இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன்தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பேசுகையில், எல்லோரையும் போல எனக்கும் அஜீத்குமார் சாருடன் பணி செய்ய ஆசை இருக்கிறது. கூடிய சீக்கிரம் அது நடந்துவிடும் என்று நினைக்கிறேன், என்று கூறி அதை உறுதி செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்